சிதம்பரம் ஈசான்யலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி
அருள்மிகு ஈசான்யலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்
இறைவன்: ஈசான்யலிங்கேஸ்வரர்
அறிமுகம்
பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், முப்பத்துஇரண்டு திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று ஈசான்யலிங்கம். வடக்குவீதி + கிழக்குவீதி சந்திக்கும் மூலை ஈசான்ய மூலை எனப்படும். இங்கு பதினாறுகால் மண்டபம் ஒன்றுள்ளது அக்காலத்தில் உலாவரும் மூர்த்திகள் இம்மண்டபத்தில் வைக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுமாம். இப்பகுதியில் இருந்த ஒரு திருக்கோயில் ஈசான்ய லிங்கேஸ்வரர். காலத்தால் சிதைந்து போன திருகோயிலில் இருந்த லிங்கமூர்த்தி தற்போது இந்த மண்டபத்தில் மேற்கு நோக்கிய இறைவனாக வீற்றிருக்கிறார். அருகில் அம்பிகை தெற்குநோக்கி உள்ளார். இறைவன் எதிரில் ஒரு நந்தியும் பலிபீடமும் உள்ளது. இந்த தெற்கு நோக்கிய ஒரு சம்ஹாரபைரவர் சன்னதியும் உள்ளது. இந்த இறைவனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். நல்லதொரு கருவறைகொண்டு விளங்கும் நாளெந்தநாளோ? #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி