சிதம்பரம் இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி :
இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிதம்பரம் நகரம்,
கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்:
இரத்தினபுரீஸ்வரர்
அறிமுகம்:
பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், பல திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று தான் இந்த இரத்தினபுரீஸ்வரர் கோயில். இந்த இறைவன் பாலமுருகனால் வழிபடப்பட்டது அதனால் இறைவன் பெயர் குமாரேஸ்வரர் என ஒரு தகவலும் உண்டு இப்பகுதி மந்தைகரை என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமகிருஷ்ணா பள்ளியினை ஒட்டியபடி ஒரு பெரிய விருட்சம் வளர்ந்துள்ளது.
முன்னர் பெரிய கோயிலாக இருந்த இக்கோயில் முற்றிலும் சிதைந்து போனபின் அதிலிருந்த லிங்கமூர்த்தி மட்டும் இன்று அந்த மரத்தடியில் இருக்கிறார். சிறிய மண்டபம் போன்ற ஒரு கோயில் கட்டப்பட்டு அருகில் இரத்தின விநாயகர் மற்றும் சில நாகர்களுடன் இறைவன் இரத்தினபுரீஸ்வரர் உள்ளார். ஊனுடம்புகள் அழியலாம், ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை. அதுபோல் கோயில்கள் மூர்த்திகள் சிதைவுறலாம், ஆனால் அவ்விடத்தில் இருக்கும் இறைசக்திக்கு அழிவில்லை. அதனால் மூர்த்திகள் இருந்த இடங்களும் வழிபாட்டுக்கு உரியனவாகும்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி