சிதம்பரம் அக்னிலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி
அக்னிலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001.
இறைவன்
இறைவன்: அக்னிலிங்கேஸ்வரர்
அறிமுகம்
தில்லை பெருங்கோயிலை சுற்றி சிதம்பரம் நகரின் முப்பத்துஇரண்டு திக்குகளிலும் சிவன்கோயில்கள் இருந்தனவாம், பல லிங்கமூர்த்திகள் காலப்போக்கில் காணமல் போக எஞ்சியிருப்பவை சில, அப்படி இருந்த ஒன்று தான் இந்த அக்னிலிங்கேஸ்வரர். பெருங்கோயிலின் ஐந்தாவது பிரகாரமான தெற்குவீதிக்கு இணையாக செல்லும் தெரு மாலைகட்டி தெரு. இதனை பெருங்கோயிலின் ஆறாவது பிரகாரமாக கொள்ளலாம். கோயில்களுக்கு மாலைகள் கட்டும் தொண்டர்கள் வசித்த தெரு என்பதால் இந்த பெயர். இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ளது. கோயிலை சற்று ஒதுக்கி அடுக்குமாடி கட்டப்பட்டுள்ளது. வழி குடியிருப்பின் நுழைவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேற்கு நோக்கிய சிறிய கருவறை கொண்டகோயில், இறைவன் கம்பீரமாக பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். முகப்பு வாயிலின் ஒரு புறம் பெரிய விநாயகமூர்த்தியும் மறுபுறம் நாகரும் மாடங்களில் உள்ளனர். மூர்த்திகளின் தன்மையை பார்க்கும்போது பெரியதொரு கோயிலை இழந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அக்னீஸ்வரர் நல்ல முறையில் இருக்கிறாரல்லவா அது போதும். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி