சிகார் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
சிகார் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
சிகார், கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610106.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
அழகியஅம்மன்
அறிமுகம்:
திருவாரூர் தெற்கில் உள்ள மாங்குடி பாலம் தாண்டி பாண்டவை ஆற்றின் தென்கரையின் வழி சென்றால் 12 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது அதன் தென்புறம் பெரிய குளம் உள்ளது. கோயில் சுற்று மதில் சுவருடன் சிறிய வாயிலுடன் உள்ளது. வேலைப்பாடுகளின்றி கருங்கல்/செங்கல் அதிட்டானமாக இறைவனுக்கு உள்ளது, பிற பகுதிகள் செங்கல் கொண்டும், உயர்ந்த தரைமட்டத்துடனும் கோயில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும், இறைவி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளனர். மண்டப சுவற்றில் சிகார் கிராமத்தின் நட்சத்திரம் ரேவதி என்றும், ராசி மீனம் எனவும் உள்ளது, எதற்காக பிரஸ்னம் பார்த்தார்கள் என தெரியவில்லை.
இறைவன் – சுந்தரேஸ்வரர் இறைவி – அழகியஅம்மன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். அருகில் சிறியதாய் தியான லிங்கம் என ஒரு லிங்கம் உள்ளது. இறைவன் முன்னர் நீண்ட மண்டபம் உள்ளது அதில் தான்தோன்றி அம்மன் என ஒரு சிறிய அம்மன் சிலை உள்ளது. அம்பிகை சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. நீண்ட மண்டபத்தின் வெளியில் உயர்ந்த மேடையில் நந்தி உள்ளார். கருவறையில் கோஷ்டங்கள் இல்லை, வடக்கில் துர்க்கைக்கு தனி மாடம் ஒன்று கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் முருகன் மகாலட்சுமி உள்ளனர். சண்டேசர் சிறியதாக உள்ளார். வடகிழக்கில் பைரவர் தனி மாடத்தில் உள்ளார். அருகில் ஒரு பழமையான விநாயகர் நாகர் மற்றொரு ? உள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிகார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி