சாளுவம்பேட்டை அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சாளுவம்பேட்டை அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
சாளுவம்பேட்டை, வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612701.
இறைவன்:
அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
கும்பகோணத்தின் தென்மேற்கில் பத்து கிமீ தொலைவில் உள்ள ஆவூரின் முன்னர் உள்ளது இந்த சாளுவன் பேட்டை. இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் ஒன்றுள்ளது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம். இறைவன் கிழக்கு நோக்கிய கருவறையும், அதன் முன்னர் கூம்பு வடிவ அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் உள்ளன. முன் மண்டபதில் தென்கிழக்கு மூலையில் வீரபத்திரர் பைரவர் மற்றும் ஒரு அம்மன் சிலை உள்ளது. கருவறை வாயிலில் ஒரு புறம் விநாயகரும் மறுபுறம் சனி பகவானும் உள்ளனர். இறைவனின் நேர் எதிரில் மகாமண்டபத்தில் நந்தி உள்ளார். அர்த்த மண்டபத்தில் அம்பிகை கருவறை வாயில் சேர்க்கிறது அங்கு இறைவன் கருவறை வாயிலில் சிறிய விநாயகர் ஒருவர் உள்ளார். அங்கும் ஒரு சிறிய நந்தி இறைவன் எதிரில் உள்ளது அதே போல் சிறிய நந்தி இறைவி எதிரில் உள்ளது. கோயிலே ஆளரவமின்றி கிடக்கிறது.
இறைவன் – அனந்தீஸ்வரர் – அகத்தீஸ்வரர் , இறைவி – அகிலாண்டேஸ்வரி
கருவறையை சுற்றி உள்ள கோட்டங்களில் தக்ஷணமூர்த்தி பின்புறம் ஒரு லிங்க பாணனை லிங்கோத்பவராக வைத்துள்ளனர். பிரம்மன் கோட்டத்தில் துர்க்கை உள்ளனர். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். விநாயகர் முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. கோயில் முழுதும் பராமரிப்பின்றி உள்ளது, மூர்த்திகள் அடிக்கடி எண்ணை சார்த்த வழியின்றி உள்ளது போலும். இருப்பதை வைத்து அர்ச்சகர் ஒரு கால பூஜையை செய்துவிட்டு போகிறார் போலிருக்கிறது. கருவறை விமானம் மண்டபம் வளாகம் என எங்கு நோக்கினும் செடிகள் மரமாகிக்கொண்டிருக்கின்றன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாளுவம்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி