சாம்பவர் வடகரை சாம்பவர் ராமமூர்த்தி திருக்கோயில், தென்காசி
முகவரி :
அருள்மிகு சாம்பவர் ராமமூர்த்தி திருக்கோயில்,
சாம்பவர் வடகரை,
தென்காசி மாவட்டம் – 627856.
இறைவன்:
சாம்பவர் ராமமூர்த்தி
அறிமுகம்:
அகத்தியரால் ஆராதிக்கப்பட்டு ஆலயங்களுள் ஒன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை எனும் கிராமத்தில் அமைந்துள்ள சாம்பவர் ராமமூர்த்தி திருக்கோயில். சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அனுமன் நதி தீர்த்தின் தென்பகுதியில் அகத்தீஸ்வரர் கோவிலும், வடபுறம் நதியை ஒட்டிய வகையில் சாம்பவர் மூர்த்தியும் எழுந்தருளியுள்ளார். இரு கோயில்களையும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் இருக்கிறது. தென்காசியில் இருந்து காரைக்குடி வழியாக 15 கிலோமீட்டர் தொலைவிலும் சுரண்டலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் சாம்பவர்வடகரை உள்ளது மெயின் ரோட்டில் கோயில் அலங்கார வளைவு உள்ளது.
புராண முக்கியத்துவம் :
சாம்பவர் மூர்த்தி சிவலிங்க வடிவில் ஆற்றை ஒட்டி எழுந்தருளியிருக்கிறார். இந்த குகையில் தான் சிவனை மனதில் கொண்டு தரிசனம் செய்தனர் என்றும், இப்போதும் அகத்தியர் இங்கு அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர். சாம்பவர் மூர்த்தியை வணங்கினால் பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற தீமைகள் நீங்கும் என்பது அகத்தியர் வாக்கு என்கின்றனர். சாம்பவர் மூர்த்தியின் வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் தங்கப்பழம் சித்தர், ஆஞ்சநேயரும், எதிரே ஜாம்பாவானும் உள்ளனர். அனுமன் நதியின் வடபுறம் சாம்பவமூர்த்தி இருப்பதால் இந்த கிராமத்திற்கு சாம்பவர் வடகரை என பெயர் வந்ததாக சொல்கிறார்கள். அனுமனும் ஜாம்பவானும் சாம்பவர் மூர்த்தியை வழிபட்டதாக வரலாறு இருக்கிறது.
நம்பிக்கைகள்:
செய்யும் தொழில் சிறக்க குடும்பத்தில் நன்மைகள் பெருக கல்வியில் சிறப்பு பெற கடன் தொல்லைகள் என எண்ணற்ற வேண்தல்களோடு அகத்தீஸ்வரரை வழிபட்டால் விரைவிலேயே நற்பலன் அடைவதாக சொல்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள சுண்ணாம்பு பாறைகளில் மூன்று சிறு அருவிகள் தோன்றி அனுமன் நதிக்கரையில் விழுந்த வண்ணம் உள்ளது. அகஸ்தீயர் அருவியில் நீராடினால் காசியிலுள்ள கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிட்டுமாம்.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாம்பவர் வடகரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை