Sunday Nov 24, 2024

சாம்பவர் வடகரை அகத்தீஸ்வரர் திருக்கோயில், தென்காசி

முகவரி :

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்,

சாம்பவர் வடகரை,

தென்காசி மாவட்டம் – 627856.

இறைவன்:

அகத்தீஸ்வரர்

அறிமுகம்:

 அகத்தியரால் ஆராதிக்கப்பட்டு ஆலயங்களுள் ஒன்று தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் மயானத்தை கடந்துதான் கோயிலுக்கான பாதை செல்கிறது. அனுமன் நதி தீரத்தின் தென்பகுதியில் அகத்தீஸ்வரர் கோவிலுள்ளது. வடபுறம் நதியை ஒட்டிய வகையில் சாம்பவர் மூர்த்தியும் எழுந்தருளியுள்ளார். இரு கோயில்களையும் ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் இருக்கிறது.  தென்காசியில் இருந்து காரைக்குடி வழியாக 15 கிலோமீட்டர் தொலைவிலும் சுரண்டலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் சாம்பவர்வடகரை உள்ளது மெயின் ரோட்டில் கோயில் அலங்கார வளைவு உள்ளது

புராண முக்கியத்துவம் :

 பழமை வாய்ந்த கோயில் இடைக்காலத்தில் பக்தர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர் கனவில் தோன்றிய அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி செய்ய சொன்னதாகவும் அதன்படி அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். முன்மண்டபத்தில் நந்தியம் பெருமான் காட்சி தருகிறார். கருவறையின் இடதுபுறம் விநாயகருக்கு கருவறையில் மூலவராக சிவலிங்க வடிவில் அகத்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கருவறையை ஒட்டிய இடதுபுறத்தில் அதிகார நந்தி மற்றும் இருவர் காட்சி தருகிறார்கள் அருகில் அதற்கு ஏற்பாடு தரிசனம் கிடைக்கிறதே சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் அனைத்து வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி யோக நரசிம்மர் பிரம்மா காட்சி தருகிறார் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் வேம்பும் அரசும் செய்து நிற்க அதன் கீழே ராகு கேதுவுக்கும் இடையில் தவழும் குழந்தையாக கிருஷ்ணன் இருக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த குழந்தை கிருஷ்ணனை வணங்கி வர அருள் பெற செய்கிறார்கள்.

நம்பிக்கைகள்:

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த குழந்தை கிருஷ்ணனை வணங்கி வர அருள் பெற செய்கிறார்கள்.

திருவிழாக்கள்:

      கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் நடைபெற்று வருகின்றன. கார்த்திகை மாதத்தில் சோமவார பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றைய தினம் மாலையில் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. நந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. அமாவாசை நாட்களில் சிறப்பு உச்சிகால பூஜையும் அன்னதானமும் நடக்கிறது. 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. பின்னர் அன்னதானம் நடக்கிறது. மாதசிவராத்திரி நாளில் விசேஷ பூஜைகள் உண்டு. மாசி மாதத்தில் மகா சிவராத்திரி விழா நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.

காலம்

1300 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாம்பவர் வடகரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top