சானார்குப்பம் குரங்கு மலை-சமணர் படுக்கைகள், வேலூர்
முகவரி
சானார்குப்பம் குரங்கு மலை-சமணர் படுக்கைகள் சானார்குப்பம், ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம் – 635 703
இறைவன்
இறைவன்: தீர்த்தங்கர்
அறிமுகம்
வேலூர்-ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து பூட்டுத்தாக்கு சந்திப்பில் வலது பக்கம் திரும்பி மேலக்குப்பம் செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்று சானார்குப்பம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள குரங்கு மலையின் அடிவாரத்தை ஒட்டிய இடத்தில் தென்னந்தோப்பை கடந்து மலையின் அடிவாரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ளது பல்லடுக்கு சமண படுக்கைகளை பாதி வழியில் ஒரு சமணக் குகை காணப்பட்டது. அக்குகையில் சூரிய ஒளி படாத சுனை காணப்பட்டது. நடைபாதை வழி மாறி படிக்கட்டுகள் மூலமாக மலை ஏற்றம் தொடர்ந்தது. கடைசி கட்டத்தில் மிகப் பெரிய பாறையில் சமணர்கள் செதுக்கிய படிக்கட்டுகள் மூலமாக மலையின் உச்சியில் உள்ளது. மலையின் உச்சியை சுற்றி பல வடிவங்களில் பாறைகள் காணப்படுகின்றன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சானார்குப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வேலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை