Thursday Jul 04, 2024

சாத்தூர் சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், விருதுநகர்

முகவரி :

அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,

சாத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626203.

போன்: +91 4562-260322. 94434 06995

இறைவன்:

சிதம்பரேஸ்வரர்

இறைவி:

சிவகாம சுந்தரி

அறிமுகம்:

 விருதுநகர் – கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் 30 கி.மீ. தொலைவில் சாத்தூரில் இந்த தலம் அமைந்துள்ளது. மூர்த்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகள் கொண்டது, சாத்தூர் சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில். ஆதியில் சோணாடு என்ற பகுதியில் சிறப்பாக விளங்கிய சாத்தனூர் என்ற ஊரே காலப்போக்கில் சாத்தூர் என அழைக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

 சாத்தூர் அருகே முற்காலப் பாண்டிய மன்னனான மாற வல்லபன் (கி.பி. 815-862) காலத்தில் இருப்பைக்குடிக் கிழவன் என்பவன் வெட்டி வைத்த பிரமாண்ட ஏரி குறித்த வட்டெழுத்துத்க் கல்வெட்டு காணப்படுகின்றன. கல்வெட்டுச் செய்தியில் இக்கோயில், தான்தோன்றீசுவரம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 13-ம் நூற்றாண்டில், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் வைப்பாற்றின் வடகரையில் உருவாக்கப்பட்ட கோயில்.

நம்பிக்கைகள்:

சிதம்பரேஸ்வருக்கு செவ்வரளி மாலை சாத்தி மனமுருக வேண்டிக்கொண்டால் தம்பதியர் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது நம்பிக்கை.   

சிறப்பு அம்சங்கள்:

விஸ்தாரமான பிராகாரத்தில் உள்ள மண்டப விதானத்தில் பன்னிரு ராசிகளைக் குறிக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பலிபீடம், கொடிமரம், நந்தியைத் தொடர்ந்து சிம்மத் தூண்தாங்கிய பதினான்கு கால் மண்டபம் உள்ளது. மகாமண்டப வாசலில் துவார பாலகர், துவார சக்திகளும், வடபுறம் நடராஜர் – சிவகாமி அம்மன் சன்னதியும் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தை அடுத்துத் கருவறையில் இறைவன் சிதம்பரேஸ்வரர் லிங்கத் திருவடிவினராக எழுந்தருளியுள்ளார். மூலவர் விமானம், பாண்டியர் கால பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமூக வாழ்வுக்கு பரிகார பூஜைகளும் நடத்தப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது.

திருவிழாக்கள்:

ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன. வைகாசி விசாக பிரமோற்சவம் பத்துத் நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் திருநாளில் தேரோட்டம் நடைபெறும். ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சிவராத்திரி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களும் சிறப்புக்குரியவை. 

காலம்

13 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சாத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருதுநகர், சாத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top