சமபந்தர் மேடு
முகவரி :
சமபந்தர் மேடு
வெள்ளாம்பெரம்பூர்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613101.
இறைவன்:
சம்பந்தர், அப்பர்
அறிமுகம்:
கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் ஆகிய கடந்தால் மேற்கே மேட்டுசாலை நிற்த்தம் என்ற இடம் வரும். அங்கிருந்து வெள்ளாம்பெரம்பூரில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சம்பந்தர் மேடு அமைந்துள்ளது. அங்கு சம்பந்தப் பெருமானுக்கும் அப்பருக்கும் என ஒரு கோயில் உள்ளது. பழைய கோயில் சிதிலமுற்றதால் தற்போது அழகிய கற்றளியாக அக்கோயிலை புதுப்பித்துள்ளனர்.
புராண முக்கியத்துவம் :
திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியை செய்து வந்தார். ஞானசம்பந்தரின் மேதமையும், ஞானத்தையும் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
ஞான சம்பந்தர் சைவம் தழைக்க, தஞ்சை நோக்கி நகர்ந்தார். ஞானக் குழந்தை சம்பந்தர் அழகான முத்துச்சிவிகையில் அமர, அவரை சீரடியார்கள் கூட்டம் போட்டியிட்டுக் கொண்டு சுமந்தது. அந்த நேரத்தில் திருஞான சம்பந்தருக்கு, திருநாவக்கரசரைப் பார்த்து தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே “சிவிகையை பூந்துருத்திக்கு திருப்புங்கள்” என்றார். திருநாவுக்கரசர் என்னும் அப்பர் சுவாமிகள், திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து உழவாரப் பணியை செய்து வந்தார். ஞானசம்பந்தரின் மேதமையும், ஞானத்தையும் பற்றி கேள்விப்பட்டிருந்த திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.
அப்போது ஒரு அடியவர் ஓடிவந்து, “அடியார்களோடு சம்பந்தப் பெருமான் பூந்துருத்தியைக் காண வருகிறார்” என்று கூறினார். அதைக் கேட்டதும் திருநாவுக்கரசரின் உள்ளம் குளிர்ந்தது. “ஞானக் குழந்தை வருவதற்குள் நாம் சென்று எதிர் கொள்வோம் வாருங்கள்” என்று தங்கள் அடியவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றார். வெகுதொலைவில் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். திருஞானசம்பந்தர் வெள்ளாம்பிரம்பூரில் உள்ள ஈசனை வணங்கிவிட்டு, பூந்துருத்தி விரைந்தார்.
அந்த ஊரின் எல்லையில் (சம்பந்தர் மேடு) சென்றபோது, அடியார்களில் அடியாராக அப்பர் சுவாமிகளும், சம்பந்தர் அமர்ந்திருந்த சிவிகையை சுமந்தபடி வந்தார். திருநாவுக்கரசரின் திருவுள்ளம் களிப்புற்றது. திருவாலம்பொழில் நெருங்கியதும் திருஞானசம்பந்தர், சீலையை விலக்கி வெளியே பார்த்தார். அப்போது அப்பர் சுவாமிகளின் நினைவு மனதில் எழ, “அப்பர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டார். அப்போது சிவிகையை சுமந்து வந்த அப்பர், தன் தலையை உயர்ந்தி, “இறைவனின் அடியவனாகிய நான், உன் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு பெற்று, இங்கிருக்கிறேன்” என்றார். அதைக்கேட்டு திடுக்கிட்ட சம்பந்தர், உடனடியாக சிவிகையில் இருந்து கீழே குதித்தார்.
தன் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு தொண்டு செய்வதையே பணியாகக் கொண்ட அப்பரின் திருவடியை பற்றுவதற்காக ஓடோடிச் சென்றார். ஆனால் திருஞானசம்பந்தர் பணியும் முன்பாகவே, அவரது அடியைத் தொட்டார், அப்பர். அந்தக் காட்சியைக் கண்ட மற்ற அடியவர்கள் அனைவரும் தரையில் விழுந்து இரண்டு பெரும் அடியார்களையும் வணங்கினார்கள். பின்னர் இருவரும் திருவாலம்பொழில் ஈசனைப் பாடி, திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர். இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் இன்றளவும், திருஆலம்பொழில் திருத்தலத்தில் ‘தோள் கொடுத்த பெருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெள்ளாம்பெரம்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி