சன்னாநல்லூர் கைலாசநாதர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
சன்னாநல்லூர் கைலாசநாதர் சிவன் கோயில்,
சன்னாநல்லூர், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609504
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் 27 கிமீ தொலைவில் உள்ளது சன்னாநல்லூர். நாயக்கர் இன மக்களில் கவரா பிரிவினர் குலதெய்வமான சென்னம்மாள் நல்லூர் என அழைக்கப்பட்டு தற்போது சன்னா-நல்லூர் எனப்படுகிறது. இங்கு கிழக்கு நோக்கி செல்லும் திட்டச்சேரி சாலையில் பெரியதொரு குளத்தின் அருகில் உள்ளது சிவன்கோயில். கிழக்கு நோக்கிய கோயில், இறைவன் கைலாசநாதர் இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியுள்ளார். கோயில் தற்போது தான் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கில் விநாயகர் செல்வவிநாயகர் என அழைக்கப்படுகிறார். முருகன் சன்னதி சற்று பெரியதாக முகப்பு மண்டபம் கொண்டுள்ளது. இக்கோயில் கருவறை கோட்டத்தில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, மற்றும் சண்டிகேசுவரர். நவகிரகம். துர்க்கை உபசன்னதிகளும் உள்ளன. வடகிழக்கில் பைரவர் ஒரு மாடத்தில் உள்ளார். இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒருகால பூஜை நடக்கின்றது. சமீப காலத்தில் தான் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது, பல லட்சம் செலவு செய்தவர்கள் இறைவன் இறைவியின் பெயரை ஒரு இடத்தில் கூட எழுதவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சன்னாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நன்னிலம், திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி