சந்திரசேகரபுரம் அகத்தீஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி :
சந்திரசேகரபுரம் அகத்தீஸ்வரர் கோயில்,
சந்திரசேகரபுரம், வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612804.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
அறிமுகம்:
சந்திரசேகரபுரம் வலங்கைமானின் மேற்கில் 3 ½ கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இரு கோயில்கள் உள்ளன, ஒன்று சந்திரசேகரர் கோயில் மற்றொன்று அகத்தீஸ்வரர் கோயில். பிரதான சாலையான வலங்கைமான்-கோவிந்தகுடி சாலையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயில். கிழக்கு நோக்கிய கோயில். கோயிலுக்கு முன் உள்ள சாலை மிகவும் உயர்ந்துவிட்டதால் மேலிருந்து கிழே இறங்கித்தான் கோயிலுக்குள் செல்லவேண்டி உள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார், அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். கோயில் மிகவும் பராமரிப்பின்றி சிதைந்து கிடக்கிறது, ஆங்காங்கே மரங்கள் வேர்விட்டு வளர தொடங்கி மண்டபங்கள் விரிசல் விட ஆரம்பித்து உள்ளது
புராண முக்கியத்துவம் :
அகத்திய மாமுனி தென்திசை நோக்கி பயணிக்கும்போது நதிக்கரைகளில் உள்ள சில சிவாலயங்களில் சிவபூஜை செய்து செல்கிறார். அவை 163 என புராணங்கள் குறிப்பிடுகின்றன. காவிரியின் கிளை நதியான குடமுருட்டியின் தென் கரையில் அவர் பூஜித்த லிங்கம் தான் தற்போது அகத்தீஸ்வரர் கோயில் எனப்படுகிறது. நாயக்கர் பாணி கூம்பு வடிவ அர்த்தமண்டபம் முகமண்டபம் என அமைந்துள்ளது. இன்றைக்கு இதுபோன்ற கூம்பு வடிவ மண்டபங்கள் கட்ட ஆட்களில்லை, இருப்பதையாவது காக்கவேண்டும். இறைவன் அழகிய லிங்க மூர்த்தியாக உள்ளார் அம்பிகையும் அழகுடன் உள்ளார். இறைவனின் கருவறை வாயிலில் விநாயகரும் சுப்பிரமணியர் கோலத்தில் முருகனும் உள்ளனர். அழகியதொரு நந்தி முகப்பு மண்டபத்தில் உள்ளது. பிரகாரத்திலோ கருவறை கோட்டங்களிலோ மூர்த்திகள் ஏதுமில்லை. சண்டேசர் சன்னதியும் காலியாகவே உள்ளது. கோயிலின் பின்புறம் பெரிய பலாமரம் ஒன்று நிழல் தந்து நிற்கிறது. மடப்பள்ளி மற்றும் சுற்று மதில் சுவர் முற்றிலும் சிதைந்து போய்விட்டது. வடக்கில் ஒரு கிணறு உள்ளது. இக்கோயிலில் நித்தம் பூஜை நடக்கின்றது, பிரதோஷம் சதுர்த்தி போன்றவையும் நடக்கின்றது. மாமுனிகள் வணங்கிய தலங்களை வழிபடுவதன் மூலம் குருவருளுடன் திருவருளும் பெறலாம் என்பது உறுதி. ஆனால் இன்று நாம் பரிகார கோயில் மட்டும் தேடியலைவதால் இக் கோயில்கள் பராமரிக்க ஆளில்லாமல் பாழ்பட்டு போயின.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
ஆண்டுகள் பழமையானது ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சந்திரசேகரபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி