Wednesday Dec 25, 2024

கௌரிவாக்கம் பஞ்சமுக அனுமன் திருக்கோயில், சென்னை

முகவரி :

அருள்மிகு கௌரிவாக்கம் பஞ்சமுக அனுமன் திருக்கோயில்,

கௌரிவாக்கம், சென்னை – 600073.

இறைவன்:

பஞ்சமுக அனுமன்

அறிமுகம்:

இத்தலம் சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கௌரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

புராண முக்கியத்துவம் :

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரது மனதிலும் இங்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என எண்ணம் தோன்றியது. அப்போது இங்குள்ள பக்தர் ஒருவரின் கனவில் பஞ்சமுக அனுமனை பிரதிஷ்டை செய் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி ஒரு சிலையைத் தேடிப் போன போது, வித்தியாசமாக ஒரே நேர்கோட்டில், ஐந்து முகங்களும் அமைந்த, பக்தர்களைத் தன் ஐந்து முகங்களாலும் பார்க்கிற மாதிரியான அபூர்வமான அமைப்புள்ள இந்த அனுமன்சிலை கிடைத்தது. இதனையடுத்துத் பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பஞ்சமுக அனுமனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்.

நம்பிக்கைகள்:

தடைப்பட்டட் காரியங்கள் நடக்கவும், திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லாநலமும் தரும். நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும். ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும் என்பதால், இவர் சன்னதிமுன் நிற்கும் ஒவ்வொருவரும் அவரவர்க்கு வேண்டியதைக் கேட்கிறார்கள். அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிச் றப்பாக கொண்டாடப்படுகின்றன. பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் இத்தலத்தில் காணப்படுபவர்தான் உங்களின் எல்லா கோரிக்கை களையும் ஈடேற்றக்கூடிய (பஞ்சமுக) அனுமன்.

திருவிழாக்கள்:

வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமத்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கௌரிவாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வேளச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top