கோவிலூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
கோவிலூர் சிவன்கோயில்,
கோவிலூர், விருத்தாசலம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606302.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
விருத்தாசலம் – வேப்பூர் கூட்டுரோடு சாலையில் 12 வது கிமீ-ல் சாத்தியம் என ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து சிறுமங்கலம் சாலை இடதுபுறம் திரும்புகிறது அதில் நான்கு கிமீ தூரம் சென்றால் சிறுமங்கலம் அடுத்து உள்ளது இந்த கோவிலூர். மானாவாரி விவசாய பகுதி, சிறுமங்கலம் ஏரி நீர்தான் வாழ்வாதாரம், மண்ணின் தன்மைக்கேற்றபடியே மக்களும் இருப்பார்கள் இது நியதி. பிடிப்பில்லாத பொலபொலப்பான மண், மக்களும் ஒரு பிடிப்பில்லாத வாழ்க்கையை தான் கொண்டுள்ளனர். மானாவாரி என்பதால் வானமும் இறைவனும் தான் படியளக்கும் எஜமானர்கள். சிறுதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு கொண்டமக்கள். இந்த புழுதிக்காட்டு பூமியிலும் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார், அதனால் கோவிலூர் எனப்பட்டது.
வான் பொய்க்கும்போது பூஜைகள் தட்டுப்படும், வாழ்வாதாரம் தேடி மக்கள் நகர்வும் ஏற்படும், காலப்போக்கில் கோயில்கள் கைவிடப்படும் அப்படி கைவிடப்பட்ட கோயில்கள் இப்பகுதியில் அதிகம். இந்த கோவிலூரிலும் அப்படி கைவிடப்பட்ட கோயிலில் இருந்த லிங்க மூர்த்தியை தான் இங்கே காண்கிறோம். ஊரின் பிரதான சாலையில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி, இப்பள்ளியை ஒட்டிய தென்புற பாதையில் பெரிய சிமென்ட் களம் ஒன்றை ஒட்டி இக்கோயில் தகர ஷெட் கொண்டு வேயப்பட்டு உள்ளது. உள்ளே எம்பெருமான் ஆவுடை தனியாகவும், பாணன் தனியாகவும் சக்தி சிவம் என இரு கூறுகளாக உள்ளனர். வெளியில் அவரது ஆத்மார்த்த தோழன் நந்தி வெயிலில் கருமமே கண்ணாக இறைவனை நோக்கியபடி உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோவிலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி