கோழிகுத்தி சபாபதீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கோழிகுத்தி சபாபதீஸ்வரர் சிவன்கோயில்,
கோழிகுத்தி, குத்தாலம் வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609003.
இறைவன்:
சபாபதீஸ்வரர்
இறைவி:
அபிராமி
அறிமுகம்:
மயிலாடுதுறையின் மேற்கில் உள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. பழைய கல்லணை சாலையில் சோழம்பேட்டை சென்று பின், அரை கிலோமீட்டர் உட்புறம் சென்றால் கோழிகுத்தி கிராமத்திற்கு செல்லலாம்.
இந்த சோழம்பேட்டையின் உட்கிராமமான கோழிகுத்தியின் வடக்கில் 11-ஆம் நூற்றாண்டு தான்தோன்றீஸ்வரர் கோயில் கிழக்கில் அழகியநாதர் கோயில் மேற்கில் வானதிராஜபுரம் சிவன்கோயில் உள்ளது. கோழிகுத்தியில் உள்ள வானமுட்டி பெருமாள் கோயிலின் நேர் பின்புறம் உள்ள அக்ரஹார தெருவில் கோபாலகிருஷ்ணர் கோயில் நடுநாயகமாக உள்ளது. இக்கோயில் 11 ம் நூற்றாண்டு கோயில் ஆகும். இந்த தெருவின் ஒரு பகுதியில் தான் சபாபதீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னம்தோப்பு பகுதியில் கிழக்கு நோக்கிய சிவன்கோயிலாக அமைந்துள்ளது. தில்லை சபாநாயகரை மனதில் கொண்டு லிங்கமூர்த்தியாக உருவாக்கி வழிபட்டு வரக்கூடிய ஒரு கோயில் தான் இது. இக்கோயில் முன்னூறு ஆண்டுகள் பழமையானது என கூறலாம்.
இறைவன் – சபாபதீஸ்வரர் இறைவி – அபிராமி கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் பிரதான வழி தென் புறம் உள்ள தெரு வழி செல்லவேண்டும். சமீபத்தில் தான் குடமுழுக்கு கண்டு அழகுடன் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார், அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். ஓரு முகப்பு மண்டபம் இரு சன்னதிகளையும் இணைக்கிறது. அதில் சிறியதாக ஒரு பெண் தெய்வம் தெற்கு நோக்கி வைக்கப்பட்டு உள்ளது யாரென தெரியவில்லை. கருவறை கோட்டங்களில் தென்முகன் மற்றும் லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் உள்ளது, அதனை ஒட்டிய ஒரு மாடத்தில் பைரவர் உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் நேர் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளது. அர்ச்சகர் பல கோயில்கள் பார்ப்பதால் நேரம் கேட்டு செல்லவேண்டும்.
புராண முக்கியத்துவம் :
நிர்மலன் எனும் மன்னன் ஒருவன் தீராத உடற்பிணியையும், பாவப்பிணியையும் கொண்டிருந்தான், இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் காவிரிகரையில் அரசமரத்தின் கீழ் பல காலம் தவம் செய்து காவிரியில் நீராடி பிணிகள் தீர்க்க பெற்றார். அரசமரத்தின் கீழ் பெருமாளின் விஸ்வரூப தரிசனம் பெற்றதால் மகரிஷி ஆனார். கோடிஹத்தி தோஷங்களையும் நீக்கி அருள் செய்ததால் இத்தலத்திற்கு “கோடிஹத்தி’, “பாபவிமோசனபுரம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. தற்போது கோழிகுத்தி என இத்தலம் அழைக்கப்பெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோழிகுத்தி