கோட்டுச்சேரி கோடீஸ்வரமுடையார் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி :
கோட்டுச்சேரி கோடீஸ்வரமுடையார் சிவன்கோயில்,
கோட்டுச்சேரி,
காரைக்கால் மாவட்டம் – 609609.
இறைவன்:
கோடீஸ்வரமுடையார்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
காரைக்கால் – தரங்கம்பாடி சாலையில் காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிமீ தூரத்திலும், தரங்கம்பாடியில் இருந்து எட்டு கிமீ தூரத்திலும் உள்ளது கோட்டுச்சேரி, வழக்கமாக நம்மூரில் தாலுக்கா எனப்படுவது அவ்வூரில் கொம்யூன் எனப்படுகிறது. கோட்டுச்சேரி ஒரு வட்ட தலைநகராக உள்ளது. பிரதான சாலையின் மேற்கில் உள்ளது சிவன்கோயில். கிழக்கு நோக்கிய கோயில், சில நூறாண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இறைவன் கோடீஸ்வரமுடையார் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், வாயிலில் பெரிதாக இரு துவாரபாலகர்கள் உள்ளனர்.
இறைவி சௌந்தரநாயகி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். இரு சன்னதிகளையும் நீண்ட சிமென்ட் மண்டபம் இணைக்கிறது. கருவறையின் கோட்டங்களில் தக்ஷணமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்கை ஆகியோரும் உள்ளனர். பரிவார தெய்வங்களாக மகாகணபதி, முருகன் மகாலட்சுமி சரஸ்வதி என வரிசையாக உள்ளன சன்னதிகள். வடகிழக்கில் நவக்கிரக மண்டபமும், நாகர்களும் தனி சன்னதி கொண்டுள்ளனர். பெரியதொரு வில்வமரத்தின் கீழ் மேற்கு நோக்கிய பைரவர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார். வடகிழக்கில் கிணறு ஒன்றும் உள்ளது. நகரின் பிரதான சாலையில் உள்ளதால் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோட்டுச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி