கோட்டுக்கல் குடைவரைக் கோயில், கேரளா
முகவரி
கோட்டுக்கல் குடைவரைக் கோயில் அஞ்சல் – சுண்டா சாலை, கோட்டுக்கல், கேரளா – 691533
இறைவன்
இறைவன்: சிவன், விநாயகர்
அறிமுகம்
கோட்டுக்கல் குகைக் கோயில் மலையாளத்தில் கல்ட்ரிகோவில் என்றும் அழைக்கப்படுவது குடவரைக் கட்டிடக்கலைக்கு உள்ள ஒரு பழமையான மாதிரி ஆகும், இது பொ.ச. 6 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் அமைக்கபட்டது. இந்த குடவரையானது தென்னிந்தியாவின், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின், அன்சலுக்கு அருகிலுள்ள கோட்டுக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோட்டுக்கால் (அதாவது கோத்தியா கல்லு- செதுக்கப்பட்ட பாறை) என்பது பாறையில் வெட்டப்பட்ட சன்னதியைக் குறிக்கும். இங்கு சமமற்ற அளவிலான இரண்டு குகைகள் உள்ளன, இவை இரண்டும் கிழக்கு நோக்கியவையாக உள்ளன இரண்டுக்கும் இடையே முதன்மை தெய்வமான பிள்ளையார் சிற்பம் உள்ளது. சிறிய குகையில் அனுமனின் சிலை உள்ளது, பெரி குகையில் ஒரு நந்தி (காளை) சிலை உள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு தெய்வமும் உள்ளது.
புராண முக்கியத்துவம்
உள்ளூர் நாட்டார் நம்பிக்கைகளின்படி, நந்தி உள்ளிட்ட சிவ அவதாரங்களால் இந்தப் பகுதிக்கு பெரிய பாறை கொண்டு வரப்பட்டது. அதற்கு அருகில் உள்ள மற்றொரு சிறிய பாறையானது ‘சும்மாடு பறை’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது பெரிய பாறையை தலையில் வைக்ககும்போது அது தலையில் உறுத்தாமல் இருப்பதற்காக வைக்கப்படும் சும்மாடு என நம்பப்படுகிறது. வரலாற்றாசிரியர்கள் இதன் காலத்தை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு என கணித்துள்ளனர். இதன் அருகில் உள்ள சடையமங்கலத்தை ஆண்ட நெடில பராந்தக நெடுச்சடையன் என்பவன் இந்த பாறையில் குகையை குடைந்து கோயிலாக்கினான் என்று கருதுகின்றனர். இது இப்போது பரந்த அளவிலான நெல் வயல்களின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு நாள் வழிபாட்டு சடங்குகள் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தினால் செய்யப்படுகின்றது. குகைகளில் நந்திகேஸ்வரர் சிலைகள் (இந்து புராணங்களில் சிவபெருமானின் வாகனம்) மற்றும் ஒரு அனுமன் சிலை (இராமாயண காவியத்தில் நந்திகேஸ்வர-வானர சண்டையை ஒத்திருக்கிறது). எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த அமைப்பு, 1966 இல் மாநில தொல்லியல் துறையால் கையகப்படுத்தப்பட்டது.
திருவிழாக்கள்
விநாயகர் சதுர்த்தி, மகாசிவராத்திரி
காலம்
6 & 8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அஞ்சல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொல்லம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்