கொல்லம் ஓச்சிரா பரப்பிரம்மன் (சிவன்) கோயில், கேரளா
முகவரி
ஓச்சிரா பரப்பிரம்மன் (சிவன்) கோயில், ஓச்சிரா, கொல்லம் மாவட்டம், கேரள மாநிலம் – 690533
இறைவன்
இறைவன்: பரப்பிரம்மன் (சிவன்)
அறிமுகம்
ஓச்சிரா கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தின், ஓச்சிறையில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோயிலாகும். புராணங்களின்படி, இந்த கோயிலானது கேரளம் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற புனித இடங்களில் ஒன்றாகும். ஓச்சிறையானது தேசிய நெடுஞ்சாலை எண் 47 க்கு அடுத்ததாக கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. இந்த கோயில் “தட்சிணகாசி” (தென்காசி) என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பழமையான இந்த புனித யாத்திரை மையம் பரப்பிரம்மன் கோவிலை மையமாக கொண்டது. இக்கோயிலானது ( பரப்பிரம்மன் அல்லது சிவன் அல்லது ஓங்கரம், உணர்வு நிலைக்காக அமைக்கபட்டுள்ளது.) இக்கோயிலானது முப்பத்தாறு ஏக்கர் நிலத்தை உள்ளடக்கியதாக உள்ளது. கொல்லத்தில் இருந்து 34 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. பிரபஞ்ச ஓர்மையை எட்டுவதற்கான ஒரு குறியீட்டு கோயிலாக இது விளங்குகிறது. இக் கோயிலானது பொதுவான கோயில்கள் போன்ற மூடப்பட்ட கட்டமைப்புகளைக் கொண்டதாக இல்லை. மேலும் இங்கு பரப்பிரம்மத்துக்கு சிலைகளோ, திருவடிகளோ என எதுவும் கிடையாது. இங்கு அழகாக பாதுகாக்கப்பட்ட மரங்களின் கீழ் பரப் பிரம்மத்தை (உருவமற்ற இறைவனான சிவன்) வணங்குகிறார்கள்.
புராண முக்கியத்துவம்
இந்த இடம் ஏன் ஓச்சிரா என்று அழைக்கப்படுகிறது என்பதற்கு பல நம்பிக்கைகள் உள்ளன. இந்த இடப்பெயர் ஓம்காரச்சிரா என்ற சொல்லில் இருந்து வந்தது என்று சிலர் நம்புகிறார்கள், மேலும் சிலர் இந்த பெயர் ஓய்மஞ்சிரா என்ற பெயரிலிருந்து வந்தது என்று நம்புகிறார்கள். மேலும் உவச்சஞ்சிரா என்பதிலிருந்து உவச்சன் என்ற பெயர் உருவானது என்பது நம்பிக்கையின்படி சிவபெருமானைக் குறிக்கும் என்று வலுவான நம்பிக்கைகள் உள்ளன. இந்த அனுமானங்கள் அனைத்தும் கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. அவர் ஓச்சிரா என்ற பெயரைப் பெறுவதற்கான உண்மையான காரணம் வேறுபட்டதாக இருக்கலாம். 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் திருவிதாங்கூரில் நில அளவைப் பணிகளானது பிரித்தானிய அதிகாரிகளான வார்ட் மற்றும் கோனர் ஆகிய இருவரிடம் ஒப்படைக்கபட்டது. இவர்களின் அறிக்கையில் ஓச்சிறைவைப் பற்றிய தகவல்களை குறிப்பிட்டனர். பதனிலத்தின் கிழக்குப் பகுதியில் மிகவும் பழமையான, சேதமடைந்த அடுக்குத் தூபி இருப்பதாக அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள பரந்த நிலத்தின் மையத்தில் ஒரு பெரிய நீர்த்தேக்கம் இருந்தது, (இது இப்போது கல்லுகெட்டுச்சிரா என்று அழைக்கப்பட்டது), இது இன்று கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளது என்பதும் தெரியவந்தது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் ஓச்சிராவில் விருச்சிகம் விழா கொண்டாடப்படுகிறது. ஓச்சிரக்களி என்பது சூன் மாதத்தில் இங்கு செய்யப்படும் ஒரு பிரபலமான சடங்காகும், இந்த ஓச்சிரக்காளியின் போது ஆண்கள் போர் வீரர்களைப் போல உடையணிந்து ‘பாட நிலம்’ என்ற சண்டைக்களத்தில் நின்று போலிப்போர் புரிவர். மேலும் முட்டளவு சேற்று நீரில் நின்று பாரம்பரிய தற்காப்பு தற்காப்புக் கலை நடனம் ஆடுவர். ஓச்சிரக்களி சடங்கானது உண்மையில் காயம்குளம் அரசரின் வீரர்களால் ஆண்டுதோறும் செய்யப்படும் ஒரு போர் பயிற்சியாகும். மேலும் “இருபட்டம் ஓணம்” (ஓணம் முடிந்த 28 நாட்களுக்குப் பிறகு) கொண்டாடப்படுகிறது. இது கால்நடைகளின் திருவிழா. இந்த திருவிழாவில், பிரமாண்டமான “எடுப்பு காளை”கள் (துணி மற்றும் வைகோலினால் உருவாக்கபட்ட பிரமாண்ட காளை உருவங்கள்) தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அவை தயாரிக்கபட்ட இடத்திலிருந்து பெரிய சக்கரங்களின் உதவியுடன் ஓச்சிறா கோயிலுக்கு இழுத்துவரப்படுகின்றன. இங்கு நவம்பர் திசம்பர் மாதங்களில் நடக்கும் பந்திரண்டு விளக்கு (12 விளக்கு திருவிழா) விழாவும் இங்கு ஒரு புகழ்பெற்ற திருவிழா ஆகும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒச்சிரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஒச்சிரா
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்