கொத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கொத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
கொத்தங்குடி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
பார்வதி எனும் காமாட்சி
அறிமுகம்:
திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே உள்ள பாங்கல் எனும் ஊரின் மேற்கில் செல்லும் சாலையில் 2 கிமீ சென்றால் வெண்ணாறு பாலம் தாண்டியதும், கொத்தங்குடி கிராமம். இந்த ஊரை சுற்றி உள்ள கிராமங்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருக்க இந்த ஊர் மட்டும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாகும். கொற்றவன் குடி என்பதே கொத்தங்குடி ஆகி உள்ளது; ஊரின் மத்தியில் ஒரு பெரிய திடல் பரப்பில் கிழக்கு நோக்கிய கம்பீரமான சிவன் கோயில் உள்ளது இறைவன் – கைலாசநாதர் இறைவி- பார்வதி எனும் காமாட்சி கைலாச நாதர் என்றாலே ஆயிரம் ஆண்டு பழமைக்கு கீழிருக்காது.
கிழக்கு நோக்கி இறைவன் கருவறை கொண்டு உள்ளார். அழகிய துவிதள விமானம் பார்க்க கம்பீரமாக காட்சியளிக்கிறது. அம்பிகை தெற்கு நோக்கி கருவறை கொண்டு உள்ளார். இறைவன் முன்னர் ஒரு உயர்ந்த முகப்பு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் வெளியில் இறைவனை நோக்கி ஒரு நந்தி உயர்ந்த மேடையில் உள்ளது. உடன் ஒரு பலிபீடமும் உள்ளது. கருவறை கோட்டங்களில் தெற்கில் தக்ஷ்ணமூர்த்தி உள்ளார் வடக்கில் இருந்த துர்க்கை சிலை மகிஷன் தலை பாகத்துடன் உடைந்து விட்டது போலும், எடுத்து கிழே வைத்து உள்ளனர். சண்டேசருக்கு தனியாக பெரிய சிற்றாலயம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு கால பூஜை மட்டும் நடக்கிறது என நினைக்கிறேன்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொத்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி