கொத்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கொத்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
கொத்தங்குடி, தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 612203.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அமிர்தவல்லி
அறிமுகம்:
செம்பனார்கோயில்- நல்லாடை சாலையில் சரியாக 12 கிமீ தூரத்தில் உள்ளது இந்த நல்லாடை, இங்குள்ள சிவன் கோயிலின் தெற்கு வீதியில் மேற்கு நோக்கி சென்றால் ஓர் பெரிய அலைபேசி கோபுரம் உள்ளது அந்த இடத்தில் திரும்பினால் கொத்தங்குடிக்கு உங்களை கொண்டு செல்லும். கொற்றவன் – குடி என்பதே மருவி கொத்தங்குடி என ஆகியுள்ளது. ஊரும் சிறியது கோயிலும் சிறிய கோயில் தான், ஆனால் உள்ளூர் மக்களால் நல்ல முறையில் நிர்வகிக்கப்படுகிறது.
கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கியபடியும் இறைவி அமிர்தவல்லி தெற்கு நோக்கியபடியும் கருவறை கொண்டுள்ளனர். கோயில் மிக நன்றாக பராமரிக்கப்படுகிறது. பூஜைகளும் முறையாக நடைபெறுகிறது. என கேட்டதில் ஆனந்தம். இறைவன் இறைவி இருவரையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. அதன் வெளியில் இறைவனுக்கு நேர் எதிரில் நந்தி உள்ளார். கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். இக்கோயிலின் வடபுறம் கிழக்கு நோக்கிய தனி கோயிலாக லட்சுமி நாராயணர் உள்ளார். எதிரில் அனுமன் சன்னதி மற்றும் கருடன் சன்னதிகள் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொத்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி