கொண்டல் தாரகபரமேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
கொண்டல் தாரகபரமேஸ்வரர் திருக்கோயில், கொண்டல் முருகன் கோயில் கொண்டல் – வள்ளுவக்குடி – அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609116.
இறைவன்
இறைவன்: தாரகபரமேஸ்வரர்
அறிமுகம்
கொண்டல் தாரகபரமேஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். தமிழ் நாடு சீகாழியிலிருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில், ரயில்வே லைனைத் தாண்டி அச்சாலையில் சென்றால், 6வது கி.மீ-ல் ‘கொண்டல்’ உள்ளது. கொண்டல் முருகன் கோயில் என்று விசாரித்து சென்றால் எளிது. இக்கோயிலில் உள்ள இறைவன் தாரகபரமேசுவரர் ஆவார். இறைவி சன்னதி இல்லை. இந்த சிவன் கோயிலை குமார சுப்பிரமணியர் கோயில் என்றும் கொண்டல் முருகன் கோயில் என்றும் அழைக்கின்றனர். முன் மண்டபத்தை அடுத்து முருகன் சன்னதி உள்ளது. அதற்கடுத்து தாரகபரமேசுவரர் சன்னதி உள்ளது. இத்தலம் அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும். அருணகிரி நாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும்.
புராண முக்கியத்துவம்
முருகனிடம் உபதேசம் கேட்ட இறைவனுடன் வந்த மகாவிஷ்ணு வழிபட்ட தலம் ஆதலின் ‘கொண்டல் வண்ணன் குடி’ என்று இஃது பெயர் பெற்றது. முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே மூலவராக குமார சுப்பிரமணியர் தரிசனம்; பக்கத்தில் தாரகபரமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இத்தலம் “கீழப் பழனி என வழங்கும் கொண்டல் குமார சுப்பிரமணியர்” என்று வழக்கில் வழங்குகிறது. 1978ல் நடந்த மகாகும்பாபிஷேக விவரக் கல்வெட்டு, கோயிலில் பதிக்கப்பட்டுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொண்டல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி