கொட்டுபாளையம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில் மயிலாடுதுறை
முகவரி :
கொட்டுபாளையம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
கொட்டுபாளையம், தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609313.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான மகிமாலையாறு கடலில் கலக்கும் இடம் தான் பொறையார். பிறைவடிவில் பிரிந்து கடலில் சேர்வதால் பிறையாறு எனப்பட்டு தற்போது பொறையார் எனப்படுகிறது. இந்த பொறையாற்றை மையமாக வைத்து பஞ்ச லிங்கதலங்கள் அமைந்துள்ளன. அவை தில்லையாடி, தேவனூர், பொறையார், கொட்டுபாளையம், ஒழுகைமங்கலம், ஆகியன. இந்த ஐந்து ஊர்களிலும் ஒரே மாதிரியான லிங்கங்கள் நிலை நிறுத்தப்பட்டன. இவையே பஞ்ச லிங்கங்கள் எனப்படுகின்றன. அவை யாவும் விசாலாட்சி அம்மன் உடனாகிய காசிவிஸ்வநாதர் என அழைக்கப்படுகிறது. இவை காசிக்கு நிகரானவை என்றும், இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பவர்க்கு காசி சென்று வந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சற்றேறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் கடந்த ஊர் எனலாம். மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலையில் உள்ள ஒழுகைமங்கலத்தை அடுத்துள்ளது. பிரதான NH32 ல் இருந்து சிறிய சாலை அரைகிமீ தூரத்தில் உள்ள கொட்டுபாளையத்திற்கு அழைத்து செல்கிறது. எருக்கட்டான்சேரி யில் இருந்தும் இரு கிமீ பயணித்து இவ்வூருக்கு வரலாம். கிழக்கு நோக்கிய சிவாலயம் சமீப வருடங்களில் குடமுழுக்கு கண்டுள்ளது. முகப்பில் லிங்கசுதையும் தில்லை பொற்க்கூரையுடன் கூடிய நுழைவாயில் உள்ளது. அதையடுத்து உயர்ந்த கொடிமரமும், நந்தி மண்டபமும் உள்ளன.
இறைவன் காசிவிஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியும் உள்ளனர். இரு கருவறைகளையும் இணைக்கிறது நீண்ட மண்டபம் ஒன்று. கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மா துர்க்கை உள்ளனர். மேற்கு பகுதியில் விநாயகர், பெருமாள், முருகன், ஐயப்பன், சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோருக்கு தனி தனி சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர்தனி சன்னதி கொண்டுள்ளார், நவகிரகங்கள் பைரவர் சூரியன் சன்னதிகள் வடகிழக்கில் உள்ளன. திருக்கடையூர் செல்வோர் ஐந்தினுள் ஒருவரான காசிநாதனை கண்டு வணங்குங்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொட்டுபாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி