கொடும்பளூர் ஐவர் கோவில்
முகவரி
கொடும்பளூர் ஐவர் கோவில் அகரப்பட்டி, கொடும்பளூர், தமிழ்நாடு 621316
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லுப்பூர் தாலுகாவில் உள்ள கொடும்பளூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு ஐவர் கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் மூவர்கோயிலின் தெற்கே அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
இப்பகுதிகளில் இராஜகேசரிவர்மன், பரகேசரி வர்மன் மற்றும் முதல் இராஜராஜசோழனது கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் பெரும்பாலானவை நொந்தா விளக்கெரிப்பதையே குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோவில் அஞ்தளி அல்லது திருவைன்தளி என்றும் இறைவன் திருவைந்தளியுடைய மகாதேவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். ஐந்தளி எனும் பெயர் கொண்டு ஐந்து கோவில்கள் ஒரே அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்திருக்கும் எனக் கொள்ளலாம். இவ்வகை கோவில்கள் பஞ்சாயதனமென வழங்கப்படும். பனைமலை கோவிலும் இதனையொத்த ஒரு அமைப்பையே கொண்டுள்ளது. மூவர் கோவிலை விட பழமையானதாக அறிப்படும் இக்கோவிலின் காலம் 8-9ம் நூற்றாண்டாக இருக்கலாம். பிற பகுதிகள் சோழர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இக்கோவிலில் காணப்படும் இராஜராஜனின் தொடக்க கால மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் அவனது 10 (?)ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் அவன் தடிகை வழி கொண்ட இராஜகேசரிவர்மனெனக் குறிப்பிடப்படுகிறான். கங்கபாடியை வென்று தடிகை பாடியை வெல்வதற்கு முன்பான காலத்தே இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கலாம்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடும்பளூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி