கேளம்பாக்கம் ஸ்ரீ பூமிநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
கேளம்பாக்கம் ஸ்ரீ பூமிநாதர் சிவன்கோயில், கேளம்பாக்கம், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 103.
இறைவன்
ஸ்ரீ பூமிநாதர்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கேளம்பாக்கம் கிராமம். கேளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் அரை கி.மீ. சென்றால் இயற்க்கை சூழலில் அரசமரத்தடியில் ஒரு சிறிய கோயிலை காணலாம். மரத்தின் வேர்ப்பகுதியில் சிவலிங்கம் உள்ளது. முன்பு பூமிக்கடியில் இருந்து தற்சமயம் வெளியில் வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஈசன் திருநாமம் ஸ்ரீ பூமிநாதர். அம்பாள் சிலை காணப்படவில்லை. சிவலிங்கம் அருகில் இயற்க்கையாக வேர்ப்பகுதி விநாயகர் உருவம்போல் காட்சியளிக்கிறது. தினமும் பூஜை இங்கு நடைபெறுகிறது. இக்கோவிலுக்கு அருகிலேயே ஸ்ரீ கேளியம்மன் கோயில் உள்ளது. தொடர்புக்கு திரு சக்திவேல்-9884989984, திரு சிவகுமார்- 9841069433, திரு ரவிச்சந்திரன்-9884102437.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கேளம்பாக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மறைமலைநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை