Thursday Dec 19, 2024

கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

இறைவன்

இறைவன்: வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரர்

அறிமுகம்

காஞ்சிபுரம் கூரம் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் கூரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல மரம் வில்வம் ஆகும். இக்கோயிலின் மூலவராக வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரர் உள்ளார். சிவலிங்கத்தின்மீது பீடம் சதுர வடிவில் உள்ளது. இக்கோவிலை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிதிலமடைந்து வருகிறது.

புராண முக்கியத்துவம்

இக்கோயில் இராமர் வழிபட்டதாகும். தினமும் மாலையில் சூரியன் மறையும் வேளையில் கதிர்கள் மூலவர் மீது விழும் வகையில் கோயில் உள்ளது. இக்கோயில் தூங்கானைமாட வடிவத்தில் உள்ளது. மண்டபத்தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. பரமேச்வர வர்மன், இராஜசிம்மன், நந்திவர்மன், நிருபதுங்கன் ஆகிய பல்லவ மன்னர்கள் இவ்வூரின்மீது ஈடுபாடு செலுத்தினர். ஏழாம் நூற்றாண்டில் முதலாம் பரமேச்வர வர்ம பல்லவர் காலத்தில் வித்ய வினீத பல்லவர் என்னும் குறுநில மன்னர் இவ்வூரில் நிலத்தை விலைக்கு வாங்கி இக்கோயிலைக் கட்டியுள்ளார். ஆதலால் இவ்வூர் வித்ய வீனித பல்லவ பரமேஸ்வரம் எனப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு வரலாறாக மா. இராசமாணிக்கனார் பின் வருமாரு விவரிக்கிறார். “பரமேசுவரவர்மன் சிறந்த சிவ பத்தன். இவன்தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களக் கட்டினான்; பலவற்றைப் புதுப்பித்தான். இவன் கூரம் என்ற சிற்றுரில் சிவன்கோவில் ஒன்றைக் கல்லாற்கட்டினான். அதற்கு இவ்வரசன் ‘பரமேசுவர மங்கலம்’ எனத் தன் பெயர் பெற்ற சிற்றுரை மானியமாக விட்டான். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ-பரமேசுரவ க்ருகம் எனப் பெயர்பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதற்கற்கோவில் ஆகும்.

காலம்

7 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கூரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top