குற்றம்பொறுத்தான் இருப்பு விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
குற்றம்பொறுத்தான் இருப்பு விஸ்வநாதர் சிவன்கோயில்,
நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611108.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
நாகப்பட்டினம் சிக்கலுக்கு வடக்கில் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஊர் தான் இது. இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது இவ்வாலயம் எனப்படுகிறது, அதனால் 800 ஆண்டுகள் பழமை இக்கோயிலுக்கு, இறைவனுக்கு யுககணக்கில் தான் சொல்லவேண்டும். இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி கோயிலின் தென்புறம் பெரியதாக ஒரு திருக்குளம் உள்ளது. இதனை கங்கைகுளம் என்கின்றனர். தீர்த்தம், மூர்த்தி, தலம் என்று மூன்று விதத்திலும் பெருமை கொண்ட ஊர் தான் இது. ஆலய முகப்பு உள்ளே சென்றதும் இறைவன் கிழக்கும் அம்பிகை தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளனர். வாயிலின் வலது, இடது புறங்கள் சூரிய, சந்திரர் மற்றும் கால பைரவர் உள்ளனர்.
கருவறை இடதுபக்கம் விநாயகர், வலப்பக்கம் வள்ளி-தெய்வானையுடன் முருகன் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, சண்டிகேசர், சனி பகவான் சன்னதிகள் உள்ளன. 1947க்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இத்தனை வருடங்கள் குடமுழுக்கு நடத்தாத குற்றத்தையும் பொறுத்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் இறைவன். கங்கைகுளம் என்பதால் இங்கு நீத்தார் சடங்குகளை செய்வது, காசியில் செய்வதற்கு ஒப்பானது. சிக்கலின் தேர்முட்டியில் இருந்து நேராக வடக்கில் ஒரே கிமீ தூரத்தில் உள்ளது.
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி