குருங்குளம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
குருங்குளம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
குருங்குளம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609608.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
பேரளம் – காரைக்கால் சாலையில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ளது குருங்குளம் பிரிவு. இடதுபுறம் ஒரு சாலை செல்கிறது அதில் இரண்டு கிமீ தூரம் பயணித்தால் குருங்குளம் கிராமத்தினை அடையலாம். கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக சிவன்கோயிலுள்ளது அருகில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. 2022-ல் குடமுழுக்கு முடிந்து அழகாக காட்சியளிக்கிறது. இறைவன் சுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி மீனாட்சி தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். எட்டு உயர்ந்த கருங்கல் தூண்கள் கொண்ட நீண்ட மண்டபம் ஒன்று இரு சன்னதிகளையும் இணைக்கிறது. இறைவன் எதிரில் ஒரு பழமையான செங்கல் மண்டபத்தில் நந்தி பலிபீடம் கொடிமர விநாயகர் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் முருகன், மகாலட்சுமி சிற்றாலயங்கள் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் துர்கை மட்டும் உள்ளனர். வடகிழக்கில் பைரவர், லிங்க பாணம் ஒன்றும் சூரியனும் உள்ளனர். காலையில் மட்டும் ஒரு கால பூஜை நடைபெறுவதாக தெரிகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருங்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி