குருக்கத்தி கட்கடரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
குருக்கத்தி கட்கடரீஸ்வரர் சிவன்கோயில்,
குருக்கத்தி, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
இறைவன்:
கட்கடரீஸ்வரர்
அறிமுகம்:
கீழ்வேளூர் – திருவாரூர் சாலையில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது, பிரதான சாலையில் இருந்து தென்புறத்தில் உள்ளது சிவன் கோயில் குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி. குருக்கத்தி என்னும் மலரில் அவதரித்தவர். – இங்குள்ள இறைவன் – கட்கடரீஸ்வரர் என எழுதப்பட்டுள்ளது. உண்மையில் கற்கடக ஈஸ்வரர் என இருக்கவேண்டும் என நினைக்கிறேன். கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயிலின் தெற்கில் ஒரு குளம் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், முகப்பில் அர்த்தமண்டபம் உள்ளது. இறைவன் சதுர பீடம் கொண்டுள்ளார். இறைவி தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார். திருப்பணிகள் நடைபெற்று தற்போது அப்படியே கிடப்பில் உள்ளது.
கட்டுமானங்கள் அரைகுறையாக நிற்கின்றன, கலசங்கள் இன்றி விமானங்கள் உள்ளன. இறைவன் கருவறையில் அம்பிகை விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இறைவன் முன்னர் ஒரு தகர கொட்டகை போடப்பட்டு உள்ளது அதில் இறைவனின் நேர் எதிரில் மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை கோட்டம் தென்முகனுக்கு மட்டும் உள்ளது, முகப்பு மண்டபம் ஒன்றும் அவருக்கு உருவாக்கப்பட்டுள்ளது, வேறு கோட்ட மூர்த்திகள் இல்லை. பிரகாரத்தில் விநாயகர் முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மூர்த்திகள் இல்லை. ஒன்றில் பைரவர் சிலை ஒன்றும் ஒன்றில் சண்டேசரும் சிறிய லிங்கம் ஒன்றும் உள்ளன. வடகிழக்கில் இரு மாடங்கள் கட்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தலம் ஆகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருக்கத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி