குபாவலி ஜம்பூர்தேவர் மந்திர், மகாராஷ்டிரா
முகவரி
குபாவலி ஜம்பூர்தேவர் மந்திர், நானேகான், குபாவலி கிராமம் மகாராஷ்டிரா – 412108
இறைவன்
இறைவன்: ஜம்பூர்தேவர் (சிவன்)
அறிமுகம்
குபாவலி, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே மாவட்டத்தில் உள்ள முல்ஷி தாலுகாவில் உள்ள கிராமம். குபாவலி மற்றும் நானேகான் கிராமத்தின் எல்லையில் பழமையான ஜம்பூர்தேவர் மந்திர் உள்ளது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பழமையான கோவில் மரங்களின் வளர்ச்சியால் அழியப்படுகிறது. இரண்டு சிவலிங்கங்கள் மற்றும் இரண்டு நந்தி கோவிலில் உள்ளது. அடையாளம் தெரியாத பல சிலைகள் உடைந்த நிலையில் உள்ளன. மேலும் லிங்கம் மற்றும் நந்தி உடைந்த நிலையில் உள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் மேலான கோவில் முற்றிலும் இடிந்து கிடக்கிறது. கோவில் சாலையும் நல்ல நிலையில் இல்லை.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குபாவலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
வட்கான் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
புனே