Thursday Dec 26, 2024

குன்றத்துார் ஆதி திருவாலீஸ்வரர் கோயில், சென்னை

முகவரி :

குன்றத்துார் ஆதி திருவாலீஸ்வரர் கோயில்,

குன்றத்துார்,

சென்னை – 600069.

இறைவன்:

ஆதி திருவாலீஸ்வரர்

அறிமுகம்:

குன்றத்துார் முருகன் கோவில் மலை அடிவாரத்தின் கீழ், ஆதி திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இதன் பகுதிகள் இடிந்து விழுந்து சிதிலமடைந்து உள்ளன. இந்த கோவிலை சுற்றி ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோவிலை சுற்றி உள்ள இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டன. இவை மட்டுமின்றி, குன்றத்துாரில் ஒன்றியத்தில் ஏராளமான கோவில்கள் சீரமைக்கப்படாமல் வீணாகி வருகின்றன. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டு, ஏலம் விட்டு கிடைக்கும் வருவாயில், கோவில்களில் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது ஷீட் போடப்பட்டு சிறிய இடத்தில் இறைவன் அருள்புரிகிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குன்றத்துார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top