குணதலைப்பாடி சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி
குணதலைப்பாடி சிவன் கோயில், குணதலைப்பாடி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 612106.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
குணதலைப்பாடி குத்தாலத்தில் இருந்து மூன்று கிமி தூரம் தான், குத்தாலத்தின் வடக்கில் ஓடும் காவிரியை தாண்டி அடுத்து ஓடும் விக்கிரமன் ஆற்றையும் தாண்டி கல்லணை சாலையில் மேற்கு நோக்கி (கதிராமங்கலம் செல்லும் சாலை) சென்றால் குணதலைப்பாடி. குணலை என்பது ஆரவாரமாக சப்தமிட்டு ஆடிடும் ஒருவகை கூத்து. இவ்வகை கூத்தாடிகள் குடியிருப்பாக இருந்த ஊராகலாம். அது பின்னர் குணதலைப்பாடி என ஆகியிருக்கலாம். குணக்கு என்றால் கிழக்கு. கதிராமங்கலத்தின் கிழக்கு திசையில் பாடி வீடு அமைத்து விக்கிரம சோழன் ஆற்றினை வெட்டினார்கள். அதனால் இந்த ஊருக்கு குணதிசை பாடி என சிலரின் தகவல். பிரதான சாலையின் இடதுபுறத்தில் முற்காலத்தில் பெரிய சிவாலயம் இருந்துள்ளது. இதில் இருந்த மூன்று லிங்கங்கள் தற்போது நீண்ட கல்நார் கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. நடுவில் இருக்கும் லிங்கத்திற்கு எதிரில் ஒரு நந்தி வைக்கப்பட்டுள்ளது. அருகில் சிறிய விநாயகர் ஒருவரும் உள்ளார். இக்கோயிலில் இருந்த ஒரு விநாயகர் சாலையோரத்தில் தனி கோயில் கொண்டுள்ளார். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குணதலைப்பாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி