Wednesday Oct 02, 2024

குடிவெண்டை திருக்காளேஸ்வரர்சிவன் கோயில், கரூர்

முகவரி :

குடிவெண்டை சிவன் கோயில்,

குடிவெண்டை, தேவர்மலை கிராமம்

கரூர் மாவட்டம் – 621301.

இறைவன்:

திருக்காளேஸ்வரர்

அறிமுகம்:

வரலாற்று சிறப்பு மிக்க 8, 12 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் கற்றளி சிவன் கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர்மலை கிராமம், குடிவெண்டை எனும் சிற்றூர் அருகே  மலைக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டியர்களால் எட்டாம் நூற்றாண்டில் செங்கற்களால் செங்கற்றளியாக கட்டப்பட்ட இக்கோவிலானது 12 ஆம் நூற்றாண்டின் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளி கோவிலாக திருப்பணி செய்யப்பட்டுள்ளது.  மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.

ஒரு தள அமைப்புடைய கற்றளி கோவிலில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையின் விமானம் முழுதும் சேதமடைந்து உள்ளது. அர்த்த மண்டபம் ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. மேல்தளத்தில் கிளுவை மரம் ஒன்று முளைத்து கட்டிடத்தை சிதைத்து வருகிது.  பாறையின் மீது சமதள அமைப்பை தோ்வு செய்து கிழக்கு பார்த்து மிக நோ்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மக்களின் தொடர்ச்சியான கவனிப்பின்மையால் சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தியுள்ளனர். கற்கோவிலானது அழகிய வேலைப்பாடுகளுடன் மிக நோ்த்தியாக கட்டப்பட்டுள்ளது.

கோவிலின் கருவறையைச் சுற்றிலும் உள்ள கோஷ்டங்களில் சிலைகள் இல்லை.  5 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாண்டியர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்துள்ளனர். பீம் அமைப்பும் அதில் அழகிய பூக்கள் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியும் கோவிலின் உடைந்த பாகங்களைக் காணலாம். கோவிலைச் சுற்றிலும் அக்கால செங்கற்களையும் ஓடுகளையும் காண முடிகிறது.  மலைக்குக் கிழக்கே பொிய அளவிலான நந்தி தலை இல்லாமல் உள்ளது. மலைக்கு மேலேயிருந்து யாரோ உருட்டி விட்டதன் விளைவாக நந்தி சிலை சேதப்பட்டுள்ளது. கோவிலின் மேற்கு பக்கம் இரண்டு சிறிய தண்ணீர்ப்பாளிகள் உள்ளன. சிறிய பாளியில் இருந்து கோவிலின் அபிஷேகத்திற்கும் பொிய பாளித் தண்ணீர் பொது மக்களின் பயன்பாட்டிற்கும் இருந்துள்ளது. 

திண்டுக்கல் – கரூர் செல்லும் வழியில் குஜிலியம்பாறைக்கு கிழக்கே மணப்பாறை செல்லும் சாலையில் 4 கிமீ தொலைவில் சேவகவுண்டச்சிபட்டி குடிவெண்டை கிராமங்களுக்கு அருகே உள்ள ஒரு மலைக் குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேவர்மலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top