Tuesday Jul 02, 2024

கீழ்க்கோவில்பத்து பூலோக நாயகி உடனாய அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

கீழ்க்கோவில்பத்து பூலோக நாயகி உடனாய அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயில், கீழ்க்கோவில்பத்து, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614401.

இறைவன்

இறைவன்: பூலோகநாதர் இறைவி: பூலோக நாயகி

அறிமுகம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட கிராமம் கீழ்க்கோவில்பத்து. அம்மாபேட்டை என்ற ஊருக்கு அருகில் உள்ளது இந்தக் கிராமம். இதன் எல்லையில் திகழ்கிறது அருள்மிகு பூலோக நாயகி உடனாய அருள்மிகு பூலோகநாதர் திருக்கோயில். தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 22-கி.மீ தொலைவில் உள்ளது அம்மாபேட்டை. இவ்வூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வாலயம். இத்தலத்தின் திருக்கதை என்னவென்று அறிய இயலவில்லை. ஆயினும் சரித்திரத் தொன்மையை ஒருவாறு அறியமுடிகிறது. கோயில் கட்டுமானப் பாணியை நோக்கினால், பிற்காலச் சோழர்களும், விஜயநகர மன்னர் களும், தஞ்சை மராட்டியர்களும் திருப்பணி செய்து கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் திகழ்கிறது ஆலயம். ஒருகாலத்தில் பிரமாண்ட விழாக்களும் நித்ய வழிபாடுகளுமாக இந்தக் கோயில், தற்போது எங்கு பார்த்தாலும் இடிபாடுகள்; சிதிலங்கள் என சோகங்களைத் தாங்கி காட்சி தருகிறது இந்த ஆலயம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் ஒருகால பூஜை நடந்து வருகிறது.

புராண முக்கியத்துவம்

மதில்களும் சந்நிதிகளும் காரை பெயர்ந்து விரிசல்களுடன் சிதிலமுற்றுத் திகழ்கின்றன. சந்நிதி விமானங்களில் செடிகொடிகள் முளைத்துள்ளன. கருவறையில் மேற்கு நோக்கி அருள்கிறார் பூலோகநாதர். “பஞ்ச பூதங்களில் இவர் மண்ணுக்குரியவர். ஆகவே நிலம், வீடு, போன்றவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் இறைவனாய் அருள்கிறார். இந்த ஸ்வாமியின் அருளால் திருமணத் தடைகள் விலகும், வியாபார விருத்தி, பொது வாழ்வில் வளர்ச்சி போன்ற நன்மைகள் சேரும்’’ என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். தெற்கு நோக்கிய அன்னையின் சந்நிதிக்கு எதிரில் சூரியன், காலபைரவர், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மேலும் விநாயகர், வள்ளி-தெய்வயானை சமேத முருகன், கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி சந்நிதி களும் இந்தக்கோயிலில் உள்ளன. ஆக ஒருகாலத்தில் பிரமாண்ட விழாக்களும் நித்ய வழிபாடுகளுமாக இந்தக் கோயில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் இடிபாடுகள்; சிதிலங்கள் என சோகங்களைத் தாங்கி காட்சி தருகிறது இந்த ஆலயம். அருகிலேயே கோயில் குளம் உள்ளது. வன்னி, வில்வம், சரக்கொன்றை ஆகிய மூன்றும் தலவிருட்சமாகத் திகழ்கின்றன. இது அபூர்வ அம்சம் என்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

பஞ்சபூதங்களில் மண்ணுக்கு உரியவர் பூலோகநாதர். இவரை வழிபட்டால் நிலம் – மனைப் பிரச்னைகள் தீரும். அம்பாள் பூலோக நாயகியோ மாங்கல்ய வரம் அருள்பவள். வன்னி, வில்வம், சரக்கொன்றை ஆகிய மூன்றும் தலவிருட்சமாகத் திகழ்கின்றன. இது அபூர்வ அம்சம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழ்க்கோவில்பத்து

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top