கீழுர் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
கீழுர் சிவன்கோயில், கீழுர், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 108..
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கீழுர் கிராமம். கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் அமைந்துள்ள கீழுர் கிராமத்தில் மிகவும் பழமையான சிவாலயம் உள்ளது. கற்கோயிலில் உள்ள இறைவடிவங்களை எடுத்து அருகில் உள்ள வேறு இடத்தில வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். கோயிலை சுற்றி முட்புதர்களை அகற்றி சமீபத்தில் உழவாரபணி நடந்தேறியது. இங்குள்ள ஈசனை இந்திரன் பூஜை செய்ததாக வரலாறு. இந்திரன் திருஉருவமும் இங்குள்ளது. இங்குள்ள விநாயகர் பொய்யாவிநாயகர் என அழைக்கப்படுகிறார். சமீபத்தில் பிரதோஷ பூஜை ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு திருக்குளமும் அருகில் உள்ளது. தொடர்புக்கு திரு செந்தில்-9445704659, திரு ராஜேஷ்-9790519740, தேவதாஸ்-7200245399. கொட்ட மேடு மிக அருகில் உள்ள இக்கிராமத்திற்கு செங்கல்பட்டு, திருப்போரூர் மற்றும் கூடுவாஞ்சேரியிலிருந்து பேருந்துகள் வருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழுர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மறைமலைநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை