கீழமாத்தூர் வருணேஸ்வரர் சிவன்கோயில்
முகவரி
கீழமாத்தூர் வருணேஸ்வரர் சிவன்கோயில், கீழமாத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்
இறைவன்: வருணேஸ்வரர்
அறிமுகம்
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி ஊருக்குள் நுழையும் இடத்தில் புறவழி சாலை பிரிகிறது. அங்கிருந்து மேற்கு நோக்கி மேலமாத்தூர் சாலை செல்கிறது, அதில் ஓலையாம்புத்தூர் வழி 4 ½ கிமி தூரம் வந்தால் கீழமாத்தூர் அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது. சிறிய கோயில் தான், சின்ன தேரே இதற்கு உண்டு. ஆனா தேர் தான் ஓடும் நிலையில் இல்லை. பழம்கோயில் புதுப்பிக்க தொடங்கி வேலை நடந்து ஓரளவுக்கு முடியும் தருவாயில் வேலை நின்று போயுள்ளது. சில ஆண்டுகளாக பணிகள் துவக்கப்படாமல் அப்படியே கிடப்பில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இறைவன் வருணேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவி பெயர் அறியமுடியவில்லை. இறைவனுக்கு முன்னர் நந்தி சிறிய மண்டபத்தில் உள்ளது. கருவறை வாயிலில் சிறிய விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். சில வாகனங்கள் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவை சிவனுக்கு உரியனவாக தெரியவில்லை. கருவறை கோட்டத்தில் தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் வினாயகர் முருகன் மகாலட்சுமிக்கு தனி தனியாக கட்டப்பட்ட சன்னதிகள் முழுமையாக முடிக்கப் பெறாமல் அப்படியே உள்ளது. கோயில் கட்டிமுடிக்கப்படும் காலம் எப்போதோ? ஊர்மக்களின் முயற்சியும் இறைவனின் அருளும் தான் அந்த நல்ல நாளை நம் கண்ணில் காட்ட முடியும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழமாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி