கீழநாஞ்சூர் சிவன் கோயில், புதுக்கோட்டை
முகவரி
கீழநாஞ்சூர் சிவன் கோயில், கீரனூர்-குன்றான்டார்கோவில் சாலை, கீழநாஞ்சூர், புதுக்கோட்டை மாவட்டம் – 622 502.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர்-குன்றான்டார்கோவில் சாலையில் உள்ள ஊர் கீழநாஞ்சூர், இங்கே மூன்றாம் குலோத்துங்கன் கால சிவாலயம் ஒன்று உள்ளது. கல்வெட்டுகள் இல்லாவிடினும், இக்கோவிலின் அமைப்பை ஒத்தே புதுக்கோட்டையில் கிட்டத்தட்ட பத்து மூன்றாம் குலோத்துங்கன் கால கோவில்கள் உள்ளது, இக்கோவிலும் அக்காலகட்டமாகவே இருக்கும். இக்கோவிலில் ஒரு மன்னர் சிலையும் உண்டு. அவர் மூன்றாம் குலோத்துங்கனாய் இருக்க வாய்ப்புண்டு. வருடத்தின் ஒரு மாதம் மட்டும் தினமும் சூரியஒளி ஈசன் மேலே படும், விநாயகர், கிருஷ்ணன், அம்மன்சிலை என ஒரு பழமையான சிவாலயத்திற்கு உள்ள அம்சம் அத்தனையும் உண்டு. இவ்வரிய சிலைகளை நாம் இன்று இழந்துவிட்டோம். இனியும் இம்மாதிரியான சிலைகளை நம்மால் மீட்டுருவாக்கம் செய்ய இயலாது, கோவிலில் புகுந்து சிலைகளை உடைக்கும் அளவுக்கு எவனுக்கு மனது வந்ததோ! இச்செய்தி அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம். கோவில் வளாகத்தையாவது பாதுகாப்போம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழநாஞ்சூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி