கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
கீழத்தஞ்சாவூர் ஸ்ரீமூலநாதர் திருக்கோயில், கீழத்தஞ்சாவூர், கங்களாஞ்சேரி (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்
இறைவன்: ஸ்ரீமூலநாதர் இறைவி: அகிலாண்டேசுவரி
அறிமுகம்
திருவாரூர் – திருமருகல் – (வழி) கங்களாஞ்சேரி – திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் – திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சை பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம். இக்கோயிலில் உள்ள இறைவன் ஸ்ரீமூலநாதர் ஆவார். இறைவி அகிலாண்டேசுவரி ஆவார். இத்தலம் செருத்துணை நாயனார் அவதரித்த தலமாகும். சுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது. திருச்சுற்றில் மகாலட்சுமி, பைரவர், சந்திரன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன. இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
புராண முக்கியத்துவம்
சோழ நாட்டில் அவதாரம் செய்தவர். சிறந்த சிவபக்தர். தஞ்சாவூர் தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் அவதாரம் செய்தவர். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் செய்தால் உடனே அவர்களைக் தண்டிப்பார். திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு அருந்தொண்டாற்றி வந்தார். ஒருமுறை ஸ்ரீ மூலநாதர் ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்திருந்தார் செருத்துணை நாயனார், ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் அரசியாயிற்றே என்று கூடப் பார்க்காமல் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக ராணியாரை இழுத்துக் கீழே தள்ளி வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் நடந்தவற்றைப் விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். சிவபெருமான் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், செருத்துணை நாயனார்க்கும் அருள் செய்தார். திருத்தொண்டுகள் பல புரிந்து செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழத்தஞ்சாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி