Wednesday Dec 18, 2024

கீழதஞ்சாவூர் பஞ்சபாண்டவர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி

கீழதஞ்சாவூர் பஞ்சபாண்டவர் சிவன் கோயில், கீழதஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

கீழதஞ்சாவூர் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. மருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும். தற்போது இத்தலம் கீழத்தஞ்சாவூர் என்று வழங்குகிறது. இங்கு இரு சிவன்கோயில்கள் உள்ளன. ஒன்று செருத்துணை நாயனார் அவதார தலமாக உள்ளது, இக்கோயில் இறைவன் மூலநாதர். மற்றொரு கோயில் பஞ்சபாண்டவர் வழிபட்டதாக கூறப்படும் கோயில். இக்கோயில் ஊரின் மேற்புறம் உள்ளது. இங்கு ஐந்து பெரிய லிங்கங்கள் மட்டும் இருந்தன வேறு மூர்த்தங்கள் இல்லை. இவை ஐந்தும் பஞ்சபாண்டவர்களால் வழிபடப்பட்டவை என கூறப்படுகிறது. வெட்டவெளியில் கிடந்த இவற்றை சமீபத்தில் கோச்செங்கண்நாயனார் அடியார்கள் சபை குழுவினர் ஐந்தையும் நிலைப்படுத்தி வைத்து அவற்றுக்கு தகர கொட்டகை அமைத்தனர். மையத்தில் இருக்கும் லிங்கம் தருமலிங்கேஸ்வரர் எனவும் அதற்க்கு நாற்புறமும் இருப்பவை அர்ஜுனேஸ்வரர் பீமேஸ்வரர் நகுலேஸ்வரர் சகாதேவேஸ்வரர்.என அமைக்கப்பட்டுள்ளன. எனினும் ஊர்மக்கள் இதனை பெரிதாய் கொண்டாடவில்லை, என்றே தோன்றுகிறது. #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழத்தஞ்சாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top