கீழஓதியத்தூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கீழஓதியத்தூர் வேதபுரீஸ்வரர் சிவன்கோயில்,
கீழஓதியத்தூர், கீழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611105.
தொடர்பு எண். 8098276699
இறைவன்:
வேதபுரீஸ்வரர்
இறைவி:
வேதநாயகி
அறிமுகம்:
வேதங்கள் நான்கினையும் ஓதியவனும், உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் தந்தையும் ஆகிய இறைவன் பொருந்தியிருக்கின்ற ஊர் என்பதால் ஓதியன் ஊர் எனப்பட்டது. சூரனை அழிக்கப் போகும் முன்னர் பார்வதி தேவி அவருக்கு வேல் எனும் ஆயுதத்தை தந்தார். அந்த வேலினை பெற்றுக் கொள்ளும் முன் ஒன்பது கடம்ப தலங்களில் அவரை வணங்கி விட்டு வருமாறு பார்வதி தேவி கூற, அதனால் முருகப் பெருமான் தான் தங்க இருந்த சிக்கல் ஊரை சுற்றி இருந்த ஒன்பது தலங்களில் ஒன்பது சிவலிங்கங்களை நிறுவி சிவபெருமானை வழிபட்ட பின்னர் பார்வதி தேவியை வழிபட்டு ஆயுதத்தை பெற்றுக் கொண்டு சூரனை அழிக்கச் சென்றாராம். இவை நவகடம்பத்தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இப்படி பல சிறப்புகள் கொண்ட இந்த தலம் மிக மோசமாக சிதைந்து போய்விட புதிய கோயில் தற்போது உருவாகியுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழஓதியத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி