கீழஓகை ஆதிகைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கீழஓகை ஆதிகைலாசநாதர் சிவன் கோயில்,
கீழஓகை, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612601.
இறைவன்:
ஆதிகைலாசநாதர்
இறைவி:
ஞானாம்பிகை மற்றும் ப்ரணவாம்பிகை
அறிமுகம்:
கீழஓகை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இறைவன் ஆதிகைலாசநாதர், ஞானம் பிரணவம் என இரு சக்தியும் அம்பிகை ரூபங்களாக இங்கே தனி தனியே உள்ளனர். இறைவி- ஞானாம்பிகை மற்றும் ப்ரணவாம்பிகை தற்போது திருப்பணிகள் காணும் கோயிலுக்குள் செல்வோம் வாருங்கள்; இறைவன் கிழக்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார். அவரது கருவறை வாயிலில் ஒரு புறம் கற்பக விநாயகரும் மறுபுறம் ஒரு சுப்ரமணியரும் உள்ளனர். சுதையாலான துவாரபாலகர்கள் உள்ளனர். எதிரில் சிறிய நந்தி பலிபீடம் உள்ளது. அம்பிகை இருவரும் தெற்கு நோக்கிய தனி தனி கருவறை கொண்டுள்ளனர். இருவரது வாயிலிலும் சுதையாலான துவார பாலகிகள் உள்ளனர்.
இறைவன் முன்னர் கான்கிரீட் முகப்பு மண்டபம் நீண்டுள்ளது இந்த மண்டபத்தில் வெளியில் ஒரு சிறிய மண்டபத்தில் நந்தி அழகாக கம்பீரமாக காட்சியளிக்கிறார். அதற்கு முன் ஒரு மேடையில் பலிபீடம். கருவறை அற்புதமான அதிட்டான அங்கங்களுடன் பிரஸ்தரம் வரை சோழர்கள் காலத்து கருங்கல் திருப்பணி, விமானம் துவிதள திருப்பணியாக உள்ளது. பார்ப்பதற்கு அழகிய தேர் போலவே உள்ளது. இதில் பல கோஷ்டங்கள் உள்ளன. பின்புறம் லிங்கோத்பவர் வடக்கில் பிரம்மன் உள்ளார். தக்ஷண மூர்த்தி இங்கே கோஷ்டத்தில் அமையாமல் தனித்து தென்புறம் தனி கோயில் கொண்டு விளங்குவது சிறப்பு. அவரின் இருபுறமும் பைரவ மூர்த்திகள் போல இருவர் உள்ளனர். யாரென கூற இயலவில்லை. வழமைபோல் சனகாதியரும் உள்ளனர்.
வடக்கில் துர்க்கை விஷ்ணு அம்சங்களுடன் தனி மாடத்தில் உள்ளார். பிரகார சிற்றாலயங்களாக செல்வா விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன் அடுத்து வாயுமூலையில் ஓர் லிங்க மூர்த்தி தனி கோயில் கொண்டுள்ளார். மரத்தடியில் சில நாகர்களும் ஒரு சுதையாலான நாகதேவதையும் உள்ளது. ஞானத்தில் தெளிந்து திரண்டு கிடக்கும் பேரறிவு மோனநிலை. இந்த நிலையில் உயிர்கள் அனைத்தும் பேரறிவுப் பெருநிலையில் ஒன்றுபட்டு விடுகின்றன. அப்படி ஒரு மோன நிலையில் சண்டேசர் காட்சிதருகிறார். வேறெங்கும் காண இயலாத சிறப்பாக இறைவனுக்கு நேர் கிழக்கில் தனி சன்னதியில் பூரணை புஷ்கலாம்பிகை சமேத ஐயனார் கோயில் கொண்டுள்ளார். அருகில் பைரவர சனைச்சரன், சூரியன் உள்ளனர். மடைப்பள்ளி ஒன்றும் தயாராகிறது. 10.3.2023 அன்று குடமுழுக்கு கண்டுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழஓகை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி