கிளியனூர் விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கிளியனூர் விஸ்வநாதர் சிவன்கோயில்,
கிளியனூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் ஏழு கிமீ தூரம் சென்றால் கிளியனூர் நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து வெண்ணாற்றை கடந்தால் சாலை ஓரத்திலேயே கிளியனூர் சிவன்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய கோயில், பத்து சென்ட் பரப்பளவில் உள்ளது.
முகப்பில் கோபுரமில்லை. அதனை கடந்தால் மண்டபம் ஒன்று இறைவன் கருவறை முன்னம் உள்ளது. இந்த மண்டபத்தின் வெளியில் சிறிய நந்தி மண்டபம் உள்ளது. தெற்கு நோக்கி அம்பிகை கருவறை கொண்டுள்ளார். கருவறையில் இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் மட்டும் உள்ளார். தெற்கில் சிறிய சிற்றாலயத்தில் விநாயகர் உள்ளார். வடக்கில் பெரிய அளவில் முருகனுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. மகாலட்சுமிக்கு ஒரு சிற்றாலயமும் ஐயப்பனுக்கு ஒரு சிற்றாலயமும் உள்ளது. கோயிலுக்கு தெற்கில் ஒரு பெரிய குளம் உள்ளது.
இறைவன்- விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி
இக்கோயில் வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலை குழுமத்தினரின் சொந்த கோயில் ஆகும். காசி சென்று வந்ததன் நினைவில் எழுப்பப்பட்ட கோயிலாகலாம். ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது என நினைக்கிறேன். இதே ஊரில் ஒரு பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கிளியனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி