கிளாக்காடு விருபாட்சீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
கிளாக்காடு விருபாட்சீஸ்வரர் சிவன்கோயில்,
கிளாக்காடு, வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612801.
இறைவன்:
விருபாட்சீஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
கிளாக்காடு – இக்கோயில் புகழ் மிக்க ஆலங்குடி அருகில் சில கிமி தூரத்தில் தான் உள்ளது. பிரதான NH66-ல் வலங்கைமான் தாண்டி ஆலங்குடி நோக்கி வரும்போது வெட்டாறு செல்கிறது அதன் தென் கரையில் 5 கிமீ தூரம் சென்றால் மாத்தூர் அடுத்து கிளாக்காடு உள்ளது. இங்கு ஆற்றின் கரையோரத்தில் ஒரு பழமை வாய்ந்த சிவன்கோயில் இருந்தது, காலப்போக்கில் சிதைந்து போனதால் ஊர் மக்கள் முயற்சியில் புதிய சிவன் கோயில் உருவாகி உள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில். இங்கு இறைவன் பெயர் விருபாட்சீஸ்வரர் விரூபாக்ஷ- என்னும் சிவபெருமான் பெயரால் அமைந்தது.
பெரிய வளாகத்தில் கோயில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியவர் உயர்ந்த விமானம் கொண்டுள்ளார், இவரின் முகப்பில் உயர்ந்த முகப்பு மண்டபம் உள்ளது. அதில் விநாயகர் சிறிய மாடத்தில் உள்ளார். மண்டபத்தில் திருமால் சிலைகள் இரண்டும் ஸ்ரீதேவி சிலையும் உள்ளன. அவை பழம் கோயிலில் பிரகார சன்னதிகளில் இருந்தவை ஆகலாம். இறைவன் எதிரில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். அம்பிகை சௌந்தரநாயகி தெற்கு நோக்கி தனி திருக்கோயில் கொண்டுள்ளார். இந்த இரு திருக்கோயில்கள் இடையில் நடராஜருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. விநாயகர் முருகன் மகாலட்சுமி சண்டேசர் பைரவர் என அனைவருக்கும் ஒன்றோடொன்று சேராத நிலையில் தனி தனி சன்னதிகளாக உள்ளன.
மேற்கு நோக்கிய பைரவர் சன்னதியில் ஒரு முனிவர் பத்மாசனத்தில் யோகத்தில் உள்ளார் அவர் விரூபாக்ஷ தேவராக இருக்கலாம். உடன் சூரியனும் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன், பிரம்மன் உள்ளனர், லிங்கோத்பவரை ஏனோ கிழே வைத்துள்ளனர். அவரருகில் ஒரு உடைந்த சண்டேசர் சிலையும் உள்ளது. காலை மாலை பூஜை என அமைதியான கிராமத்தில் முக்கண்ணன் உள்ளார், கேட்டவர்க்கு கேட்டபடி திருமண வரம் தருவார் என்கின்றனர் கிராமமக்கள்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கிளாக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி