Wednesday Dec 25, 2024

கிம்புலன் கோயில் (புஸ்தகசாலா கோயில்), இந்தோனேசியா

முகவரி :

கிம்புலன் கோயில் (புஸ்தகசாலா கோயில்),

கலியூரங் சாலை, ஸ்லேமன் ரீஜென்சி,

 யோக்கியகர்த்தா 55584,

இந்தோனேசியா

இறைவன்:

சிவன்

அறிமுகம்:

                கிம்புலன்கோயில்(புஸ்தகசாலா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) கி.பி. 9 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  கோவிலாகும். இது இந்தோனேசியாவில் யோக்யகர்த்தாவில் ஸ்லெமன் என்னுமிடத்தில் உள்ள கலியுராங் என்னுமிடத்தில் உள்ளது. இந்தோனேசியா பகுதியில், கலியுராங் சாலையில் அமைந்துள்ளது. கோயில் சுமார் ஐந்து மீட்டர் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்தது. சதுர வடிவில் அமைந்த ஆண்டிசைட் கல் சுவர்கள் மற்றும் விநாயகர்நந்தி, மற்றும் லிங்கம் – யோனி ஆகியோரின் சிலைகளை வெளிப்படுத்த கோயிலின் பகுதிகள் அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்டுள்ளன.

புராண முக்கியத்துவம் :

 ஒரு புதிய பல்கலைக்கழகத்திற்காக நூலகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளங்களை அமைப்பதற்காக நில அகழ்வாராய்ச்சியின் போது இந்த கோயில் 11 டிசம்பர் 2009 ஆம் நாளன்று தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்ட இக்கோயில் தொடர்பாக ஆய்வு மற்றும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி யோககர்த்தா தொல்பொருள் அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த கோயில் இந்து சைவ பிரிவினைச் சார்ந்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது, மேலும் சிற்பங்களின் செதுக்குதல் மற்றும் சிலைகளின் கலையமைப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்தக் கோயிலானது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையேயான இடைப்பட்ட காலத்தில்,மாதரம் இராச்சியத்தின்போது, கட்டுப்பட்டு இருக்கலாம் என்று உறுதியாக நம்ப முடிகிறது.

இந்த கோயில் ஒரு இந்து சைவ கோயிலாகும். இருப்பினும் இந்த காலத்தில் காணப்படுகின்ற ஒரு கோயிலின் கட்டட அமைப்போடு ஒத்து நோக்கும்போது இதன் கட்டட அமைப்பு மிகவும் அசாதாரணமானது. பொதுவான மத்திய ஜாவா கோவில்களைப் போலல்லாமல், இக்கோயில் கல் பிரதான அமைப்பு மற்றும் உயர்ந்த கூரை ஆகியவை காணப்படவில்லை. மேலும் இந்த கோவில் அளவில் சிறியதாக உள்ளது. மேலும் எளிமையான அலங்காரங்களைக் கொண்டு அமைந்துள்ளது. இது காலாவின் செதுக்கலுடன் சுவர் கல் அடித்தளத்தோடு பல சதுரங்களைக் கொண்டுள்ளது. படிக்கட்டுகளில் காலா எனப்படும் பைரவர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உள் அறைகளில் விநாயகர், நந்தி, மற்றும் லிங்கம்-யோனி ஆகிய சிலைகள் உள்ளன.

காலம்

கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கலியுராங்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஸ்டாசியன் மகுவோ

அருகிலுள்ள விமான நிலையம்

அடிசுட்ஜிப்டோ (JOG)

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top