கிக்கேரி ஜனார்த்தனன் கோயில், கர்நாடகா
முகவரி
கிக்கேரி ஜனார்த்தனன் கோயில், கிக்கேரி, கர்நாடகா – 571423
இறைவன்
இறைவன்: ஜனார்த்தனன்
அறிமுகம்
கிக்கேரியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனார்த்தனன் கோயில் கே.ஆர். மாண்டியா மாவட்டத்தில், ஹொய்சலா பாணி கட்டிடக்கலையுடன் அமானிகெரேவின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோவிலின் சுவர்களில் 4 அடி உயர கல் பீடத்தில் கடவுள் சிலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. மதில் சுவர் இடிந்து விழுந்ததில், சிலைகள் அனைத்தும் சிதிலமடைந்து தரையில் விழுந்துள்ளது, கோவில் பராமரிப்பின் பரிதாப நிலையை விளக்குகிறது. நரசிம்மர், கோபாலகிருஷ்ணர், மகிஷா மர்த்தினி, கலிங்க மர்தனம், யோகநரசிம்மர், விஷ்ணு, சிவன், விநாயகர் போன்ற தெய்வங்களின் அழகிய சிற்பங்கள், ஹொய்சாள பாணியில் இருக்கின்றன.
புராண முக்கியத்துவம்
ஜனார்த்தனன் கோயில் கி.பி 1260 ஆம் ஆண்டு மூன்றாம் ஹொய்சாள மன்னன் நரசிம்மர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், காலப்போக்கில், போதிய பராமரிப்பின்மையாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும், கோவில் சிதிலமடைந்து வருகிறது. இதற்கிடையில், மூலஸ்தானத்தில் செதுக்கப்பட்ட ஜனார்த்தனன் சிலை நியூயார்க் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், அதை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், கோவிலை பராமரிக்கவும், சிலையை மீட்டெடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை என கிக்கேரி மக்கள் கூறுகின்றனர். கோபுரத்தில் களைகள் வளர்ந்து கட்டமைப்பை பலவீனப்படுத்தியுள்ளது.
காலம்
கி.பி 1260 ஆம் ஆண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கிக்கேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஸ்ரீரங்கப்பட்டிணம்
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூரு, மைசூர்