Thursday Dec 26, 2024

காலில் சங்கிலியுடன் அனுமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அமைந்துள்ளது மேல்முடியனூர். இங்கு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆஞ்சநேயரின் கால், கல்லால் செதுக்கப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளது.

ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் புறப்படத் தயாரானார். அப்போது தன்னுடன் அனுமனையும் வரும்படி அழைத்தார். ஆனால் அனுமனோ, “பூலோகத்தில் எங்கெல்லாம் ராமகீர்த்தனம் கேட்கிறதோ.. அங்கேயே இருக்க விரும்புகிறேன்” என்று கூறிவிட்டார்.

ராமர் மீண்டும் அழைத்தால், அவர் மேல் உள்ள பக்தியில் மனம் மாறி சென்றுவிடக்கூடாதே என்பதற்காக, தன்னுடைய காலில் இவ்வாறு சங்கிலியை பிணைத்திருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்த திருத்தலம்.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top