காரைக்கால் நித்தீஸ்வரர் திருக்கோயில்
முகவரி :
காரைக்கால் நித்தீஸ்வரர் திருக்கோயில்,
காரைக்கால் வட்டம்,
காரைக்கால் மாவட்டம் – 609605.
இறைவன்:
நித்தீஸ்வரர்
இறைவி:
நித்தியகல்யாணி
அறிமுகம்:
காரைக்கால் பிரதான சாலையில் உள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் கிழக்கு நோக்கி உள்ளது,இக்கோயில் விநாயகரை வணங்கி அதன் எதிரில் செல்லும் சாலையில் சென்றால் நித்தீஸ்வரம் கோயில் கிழக்கு நோக்கியதாக அமைந்திருக்கும். இறைவன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார் அவரின் முன்னர் ஒரு மகா மண்டபம் அமைந்துள்ளது, கோயிலின் முகப்பு அழகு தெரியா வண்ணம் பெரிய தகர கொட்டகை போடப்பட்டு உள்ளது. உள் மண்டபத்தில் தெற்கு நோக்கிய கருவறை கொண்ட நித்தியகல்யாணி அம்பிகை வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.
கருவறை கோட்டங்களில் தென்முகன் உள்ளார் அவருக்கு எதிரில் ஒரு தகர கொட்டகை உள்ளது. அதில் ஒரு விநாயகரும் இரு நாகர்களும் மேடை கட்டி வைக்கப்பட்டுள்ளனர். வடக்கில் துர்க்கை உள்ளார் அவரின் முன்னம் ஒரு சிமென்ட் மண்டபம் இழுக்கப்பட்டுள்ளது தென் மேற்கில் ஒரு பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது மக்கள் அதனை வழிபட்டு செல்ல ஏதுவாக அதற்க்கு தகரகூரை அமைத்துள்ளனர். பிரகாரத்தில் பின்புறம் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், பூரணை புஷ்கலா சமேத அய்யனார், கருமாரியம்மன் ஆஞ்சநேயர் நவகிரகம் உள்ளன.
எல்லா இடங்களிலும் முகப்பில் தகரகொட்டகைகள் போடப்பட்டு உள்ளது. இதுபோன்ற தேவையற்ற தகரகொட்டகை போட்டு கோயில் பிரகாரங்களை அடைப்பதால் பரவெளியில் இருந்து கருவறை நோக்கி வரும் ஆகர்ஷண சக்தி அலைகள் முழுமையாக ஈர்க்கப்படாமல் போகின்றன. வடகிழக்கில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தன் துணையுடன் உள்ளார் அருகில் சனிபகவானுக்கும் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டுள்ளது இக்கோயில் எவ்வகையான ஆகமகோயில் என அறியமுடியவில்லை. அய்யனார் கருமாரி ஆஞ்சநேயர் புற்றுவழிபாடு என அனைத்தும் கலந்து கட்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
நித்திய என்றால் என்றென்றும் நிலைத்திருக்கும்; முடிவில்லாத.எனும் பொருள் தரும். மனம்,மொழி மெய் இவைகளால் எனும் திரிகரணங்களால் அறியஇயலாத ஈசன் குடி கொண்டிருக்கும் தலம் இந்த நித்தீச்வரம். இக்கோயில் பல சிறப்புக்களை கொண்டது. இது ஒரு திருமண தடை நீக்கும் தலம் ஆகும், எவ்வாறு என்றால் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்த தலம் இதுவே. விரைந்து திருமணம் நடக்க வேண்டுவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம். பொருள் வரவு, தன லாபத்திற்க்கு இக்கோயில் இறைவனை வணங்கினால் நன்மை கிடைக்கும்.
இத்தலத்தின் விசேஷ மூர்த்தியாக விளங்கும் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவமூர்த்தி தன் மனைவியோடு காட்சியளிக்கிறார் தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து யாகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலன்களை தரும்.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி