காரைக்கால் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
முகவரி :
கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
காரைக்கால் நகரம்,
காரைக்கால் மாவட்டம் – 609602.
இறைவன்:
கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி:
சௌந்தரவல்லி
அறிமுகம்:
வாழ்வியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான திருமணம், ஜாதக ரீதியிலான பிரச்சனைகளால் தடைபடும்போது, அதற்கான தீர்வினை வேண்டி ஆலயம்தோறும் சென்று வழிபாடுகள் செய்வதும் உண்டு. அதில் கல்யாண வரம் அருளும் தலங்கள் ஆங்காங்கே உள்ளன. அப்படி ஒன்று தான் காரைக்காலில் உள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயில். இது அரசலாற்றின் வடகரையில் சப்ஜெயில் ரோட்டில் உள்ளது. சிறிய கோயில் தான் எனினும் கீர்த்தி மிக்கது, மேற்கு நோக்கிய கோயிலல்லவா அதனால் பலன்கள் கூடுதலாகவே கிடைக்கும்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோயில், சிறிய அலங்காரவளைவு கொண்டுள்ளது. அதன் வழி நுழைந்தவுடன் உயர்ந்த கொடிமரம், நந்தி, கொடிமர விநாயகர் உள்ளனர். இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர் மேற்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார் இறைவி சௌந்தரவல்லி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இரு கருவறைகளையும் இணைக்கும் மண்டபத்தில் தென்புறம் விநாயகரும் வடபுறம் முருகனும் இறைவனை நோக்கி நந்தி ஒன்றும் உள்ளது. கருவறை கோட்டத்தில் துர்க்கை, பிரம்மன் லிங்கோத்பவர் தென்முகன் விநாயகர் ஆகியோர் உள்ளனர்.
வடபுறத்தில் சண்டேசர் சன்னதி உள்ளது. தென்மேற்கு மூலையில் ஐயப்பன் கிழக்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். பிரகாரத்தின் கிழக்கு பகுதியில் பைரவர், சூரியன் இருவருக்கும் சேர்ந்தாற்போல் சிற்றாலயம் அமைந்துள்ளது. வடகிழக்கு பகுதியில் நவகிரகம் மற்றும் நாகர் சிலைகள் உள்ளன. கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. கல்யாணசுந்தரேஸ்வரர் பெயர் கொண்ட இறைவனை வணங்குவதன் மூலம் திருமணம் எளிதில் நிறைவேறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி