காருகுடி வைத்தியநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
காருகுடி வைத்தியநாதர் சிவன்கோயில்,
காருகுடி, திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613204.
இறைவன்:
வைத்தியநாதர்
இறைவி:
பாலாம்பிகை
அறிமுகம்:
காருகுடி திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஒரு கிமீ தூரத்தில் தான் உள்ளது. பிரதான சாலையில் ஒரு காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது அந்த இடத்தில் இடதுபுறம் திரும்பும் ஒரு சிறிய அக்ரஹார தெருவில் சில நூறு அடிகள் சென்றால் தெருவின் கடைசியில் உள்ள சிறிய வாய்க்காலை தாண்டினால் ஒரு சிதிலமடைந்த சிவன்கோயில் ஒன்று கிழக்கு நோக்கி உள்ளது, திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. சுற்றிலும் தென்னை மரங்களும் தேக்கு மரங்களும் சூழ்ந்த நிழலான பகுதி. இறைவன் – வைத்தியநாதர் இறைவி – பாலாம்பிகை எனப்படுகிறது. இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் நோக்கி கருவறை கொண்டுள்ளனர். கோஷ்ட மூர்த்திகள் இல்லை, சண்டேசரும் இல்லை. லிங்க மூர்த்தி நடுத்தர அளவில் உள்ளார். அம்பிகையும் லிங்கமூர்த்திக்கு ஈடான அளவில் உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காருகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி