காஞ்சீபுரம் வைரவேச்சுரம்
கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ளது. இதற்கு அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளார்.
காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் பிரம்மதேவர் வழிபட்ட பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்தான்.
உருத்திரமேரூருக்கு அருகில் உள்ள சில மலைகளிலும், திருக்கழுக்குன்றத்திற்கு அருகிலுள்ள செம்பாக்கம் மலை மீதும் பைரவருக்கென தனி ஆலயங்கள் உள்ளன.