Thursday Dec 26, 2024

கவி கங்காதரேஸ்வரர் கோவில், பெங்களூர்

முகவரி

கவி கங்காதரேஸ்வரர் கோவில், கவிபுரம் விரிவாக்கம், கெம்பெகவுடா நகர், பெங்களூர் – 560019

இறைவன்

இறைவன்: கவி கங்காதரேஸ்வரர் இறைவி: பார்வதி தேவி

அறிமுகம்

கவி கங்காதரேசுவரர் கோயில் மேலும் கவிபுரம் குகைக் கோயில் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் இந்தியக் குகைவரைக் கோயில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரு சிட்டி மார்க்கெட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் குட்டஹள்ளி கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலின் முன்புறத்தில் உள்ள மர்மமான வட்டக் கல்களுக்கும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் சூரியனின் கதிர்கள் சன்னதியில் ஒளிவீசுவதற்கும் பிரபலமானது. இது 16ஆம் நூற்றாண்டில் நகரத்தின் நிறுவனராக இருந்த கெம்பெ கவுடா என்பவரால் கட்டப்பட்டது. சுவாமியின் பிராகாரத்தில் நமக்கு நேராகத் திருக்காட்சி தருகிறார் அருள்மிகு கவி கங்காத ரேஸ்வரர். `கவி’ என்றால் `குகை’ என்று பொருள். குகைக்குள் சுவாமி எழுந்தருளியிருப்பதால் சுவாமிக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல் கிறார்கள். மேற்குப் பார்த்த ஆவுடையார்மீது தெற்குப் பார்த்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் அர்த்தமண்டப பிராகாரத்தில் சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் அம்பிகை பார்வதி தேவி என்ற திருப்பெயர் கொண்டு காட்சி தருகிறார். அம்பிகையின் சந்நிதிக்கு அடுத்து துர்கை சந்நிதி அமைந்திருக்கிறது. கோவில் கர்நாடக பண்டைய மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் சட்டம் 1961 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். மேலும்,இந்திய கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பல கோயிலாகுவும் திகழ்கிறது.

புராண முக்கியத்துவம்

புராதனப் பெருமைகள் கொண்ட இந்தக் கோயில் முற்காலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருந்ததாம். 16-ம் நூற்றாண்டில் பெங்களூரு நகரத்தை நிர்மாணிக்க முற்பட்ட கெம்பெ கௌடா, வனப்பகுதியில் ஒருநாள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது, தெற்குத் திசையிலிருந்து மணியோசை கேட்டது. ஓசை வந்த திசையில் வந்து பார்த்தபோது குகைக்கோயிலில் சுவாமியும் நந்திதேவரும் இருப்பதைக் கண்டார். இறைவனை மனமுருக வழிபட்ட கெம்பெகவுடா, `பெங்களூரை அழகுற நிர்மாணிக்க வேண்டும்’ என்ற தனது எண்ணமும் விருப்பமும் வெற்றிகரமாக முடியவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு, கோயிலைக் கட்டி முடித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறது. அவருடைய காலத்தில்தான், இறைவனின் திருவுள்ளக் கட்டளையின்படி இப்போது நாம் தரிசிக்கும் பல தெய்வ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மகரிஷிகளின் தவ வலிமையால் தோன்றியதால், இந்தக் கோயிலில் காரணாகம முறைப்படி மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சூரியபகவான் தன்னுடைய வடதிசைப் பயணமான உத்தராயனக் காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று மாலை அஸ்தமிக்கும் வேளையில் சிவபெருமானை சுமார் 20 நிமிடங்கள் வழிபடுகிறார்.

நம்பிக்கைகள்

திருமணம் தடைப்படும் அன்பர்கள் செவ்வாய்க்கிழமைகளில் தலைக்கு ஸ்நானம் செய்துவிட்டு, ஈர வஸ்திரத்துடன் சப்தமாதர்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணத் தடை விலகி நல்ல இடத்தில் வரன் அமைகிறது. கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், வியாழக்கிழமை மாலையில் கோயிலுக்கு வந்து, தெற்குப் பார்த்து குருமூர்த்தியாக அருள்புரியும் கங்காதரேஸ்வரரையும், தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டால், கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெறலாம். கண் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் அக்னி மூர்த்தி. ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் அக்னி மூர்த்திக்குப் பாலபிஷேகம் செய்து, சூரியனை நமஸ்காரம் செய்தால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டுமானால், கோயிலுக்கு வந்து சக்தி கணபதிக்குச் சிவப்புத் தாமரை மலர்களை அர்ப்பணித்தால், எதிரிகளின் தொல்லை நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

திரேதாயுகத்தில் மகரிஷிகள் மூன்று தலங்களில் இறைவனை பூஜிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். உஷத் காலத்தில் காசி, உச்சிக்காலத்தில் கவிபுரம், மாலையில் சிவகங்கா ஆகிய தலங்களில் பூஜை செய்திருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் இரண்டு சுரங்கப் பாதைகள் ஒன்று காசிக்கும், ஒன்று சிவகங்காவுக்கும் செல்வது போல் அமைந்திருந்தனவாம் தற்போது அவை மூடப்பட்டுவிட்டன. பிற்காலத்தில் இந்தத் தலத்துக்கு வந்த கௌதம ரிஷி, இறைவனைக் குறித்து தவமியற்றினார். அவருடைய தவத்துக்கு அருள்புரியத் திருவுள் ளம் கொண்ட சிவபெருமான் சுயம்பு லிங்கமாகக் காட்சி தந்தார். நந்தியும் சுயம்புவாகத் தோன்றியது தான் சிறப்பு. பதஞ்சலி மகரிஷியும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டிருக்கிறார். ‘சக்திச் சித்த ரனுக்த உத்தமம்’ என்று சொல் லியபடி அம்பிகைக்குதான் இந்தக் கோயிலில் பிரதானம் தரப்பட்டுள்ளது. எனவேதான் அம்பிகை சுவாமிக்கு வலப்புறத்தில் சந்நிதி கொண்டிருக்கிறார்.

திருவிழாக்கள்

இங்கே, பிரதோஷம், மகர சங்கராந்தி, போன்ற வழிபாடுகளும், மகா சிவராத்திரியும் விசேஷ மாகக் கொண்டாடப்படுகிறது.

காலம்

9 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹுலிமாவு

அருகிலுள்ள இரயில் நிலையம்

பெங்களூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பெங்களூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top